Home Blog Page 4058

எக்காரணத்துக்காகவும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது!

“எந்தகாரணத்துக்காகவும் தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது.இடர்நிலைமை காணப்படின் அந்த பிரதேசத்தில் பிரிதொரு நாளில் தேர்தல் நடத்த சட்டத்தில் இடமுண்டு. எனவே, திட்டமிட்ட அடிப்படையில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் வாக்களிப்பதற்கு தயாராகவேண்டும்.”

இவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” சுகாதார நடைமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானியை வெளியிடுமாறு சுகாதார தரப்பிடம் நாம் கோரியுள்ளோம். ” என்றும் அவர் கூறினார்.

கட்சிக்குள் சண்டை – சிவா, பத்மா முட்டி மோதல்!உடைந்தது ஒருவரின் மண்டை!!

தொழிலாளர் தேசிய  சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் இருவருக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் நேற்று அடிதடியும் அரங்கேறியுள்ளது. இதனால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவனேசனுக்கும், பத்தாவுக்குமிடையிலேயே இவ்வாறு கடும் மோதல் மூண்டுள்ளது.

நிதி கொடுக்கல் –  வாங்கல் தொடர்பில் ஏற்பட்டிருந்த முரண்பாடு காரணமாகவே இம்மோதல் இடம்பெற்றுள்ளது என்று ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் காசல்ரீயிலுள்ள விடுதியொன்றில் நேற்று முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் உதயகுமாரும் கலந்துகொண்டுள்ளார்.

சிவநேசனுக்கும், பத்மாவுக்குமிடையில் நிதி கொடுக்கல், வாங்கல் தொடர்பில் ஏற்பட்டிருந்த சர்ச்சைக்கு முடிவு கட்டி, சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் குறித்த சந்திப்பில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சங்கத்தின் பிரதித் தலைவர் உதயகுமார், பத்மாவை அழைத்துக்கொண்டு வெளியில் வந்துள்ளார்.

அவ்வேளையில் சிவநேசன் தரப்பால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், இதனால் பத்மாவின் சாரதி படுகாயமடைந்தார் எனவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவநேசன் கத்தியை காட்டி மிரட்டியதாகவும் பத்மா தரப்பால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கட்சி தலைமைப்பீடத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 1,988 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 07 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.

647 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 646 ஆக இருக்கின்றது.

‘1000 ரூபா முக்கியமல்ல – சஜித் முன்வைத்துள்ள புதிய யோசனை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் கூலியை அதிகரிக்க விடாமல் செய்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் அப்போதைய பிரதமர் ரணிலுமே பொறுப்புக் கூறவேண்டுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

ஊடகப் பிரதானிகளைக் கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று (13) காலை சந்தித்துக் கலந்துரையாடும்போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நீங்கள் அமைச்சராக இருந்தபோது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 50 ரூபாய் சம்பள அதிகரிப்பை அமைச்சரவையில் பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கவில்லை.  அப்படியிருக்கையில் என்ன அடிப்படையில் 1,500 ரூபாய் நாள் கூலி வழங்குவேன் என உறுதியளித்தீர்கள்?” எனக் கேட்கப்பட்டபோது,

“அப்போதைய அமைச்சரவையில் நானும், அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், ராஜித சேனாரத்ன போன்றவர்களுமே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்திச் சண்டை பிடித்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமான அச்சம்பள அதிகரிப்புச் சாத்தியப்படவில்லை.

இதனைப் பெற்றுக்கொடுப்பதில் முட்டுக்கட்டையாகச் செயற்பட்டவர்கள் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்தான். அவர்கள்தான் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

“என்னைப் பொறுத்தவரையில் சம்பள அதிகரிப்பு ஆயிரமா, ஆயிரத்தி ஐநூறா என்பதல்ல முக்கியம். பெருந்தோட்ட மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்து, தோட்டத்துறையை மேம்படுத்துவதனூடாகவே அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.

அந்நிலையை உருவாக்கினால், 1,500 ரூபாய் சம்பளம் என்பதே தேவைப்படாது. அனைவரும் பொருளாதாரத் திருப்தியுள்ளவர்களாக மாறிவிடுவார்கள்” என, சஜித் பிரேமதாஸ மேலும் கூறினார்.

தலைதூக்கும் தேர்தல் வன்முறை – அனுசாவின் வாகனங்கள்மீதும் தாக்குதல்

நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் மறுபுறத்தில் தேர்தல் வன்முறைச்சம்பவங்களும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபுவின் வாகனங்கள்மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் கோடரி சின்னத்தின் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளரான  அனுசா சந்திரசேகரனின் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தப்பட்டுவந்த வாகனங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அகரப்பத்தனை பொலிஸ் நிலையம், நுவரெலிய மாவட்ட பொலிஸ் காரியாலயம், தேர்தல் ஆணையகம் ஆகியவற்றில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையக மகக்ள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணனின் அடியாட்களே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளனர் என அனுசா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

‘சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை’

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதா ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படும் வரை இந்த சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு நானே அமைச்சர் – திகாம்பரம் சூளுரை

மலையக மக்களை காட்டிக்கொடுத்துவிட்டு, சுகபோகத்துக்காக நாம் அரசியல் நடத்தவில்லை. மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே அரசியல் நடத்துகின்றோம். எனவே, எமக்கான ஆதரவை வழங்கவேண்டியது மக்களின் பொறுப்பாகும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அத்துடன், என்னையும், மனோவையும், ராதாவையும் எவராலும் ஏமாற்றமுடியாது. நாங்கள் மூவரும் இல்லாவிட்டால் மலையக மக்களை ஏமாற்றிவிடுவார்கள். அதற்கு இடமளிக்கவேண்டும் எனவும் திகாம்பரம் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். திகாம்பரம் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்த பின்னர் எனது அமைச்சு பதவியும் பறிபோய்விட்டது. இதனால் அமைச்சின்கீழ் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் வீட்டுதிட்டங்களும் இடைநிறுத்தப்பட்டன. ஆனால் எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு பிறகு நான்தான் அமைச்சராவேன். உங்களுக்காக முன்னெடுத்த அனைத்து சேவைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பேன்.

மலையகத்தில் இவ்வளவுநாள் இருந்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்? நானும், மனோவும், ராதாவும் இணைந்த பின்னர் குறுகிய காலப்பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்ககூடியதாக இருந்தது. அந்த மன திருப்தியுடனேயே வாக்கு கேட்டுவந்துள்ளோம். எனவே, தமிழ் முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும். அப்போதுதான் சமுகத்துக்காக பேரம் பேசும் பலமும் அதிகரிக்கும்.

நாம் ஒருபோதும் மக்களை காட்டிக்கொடுத்துவிட்டு, சுகபோகத்துக்காக அமைச்சுப்பதவிகளை பெறவில்லை. மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே பதவிகளை ஏற்றோம். நான் எமது மக்களுக்காக குருவிகூடையாவது கட்டிக்கொடுத்துள்ளேன். சின்ன பையன் என்ன செய்துள்ளார்?

நான் அமைச்சராக இருந்தபோது 2 தடவைகள் 3000 ரூபா வாங்கிக்கொடுத்தேன். 5 ஆயிரம் ரூபா முற்கொடுப்பனவு பெற்றுக்கொடுத்தேன். கட்சி சார்பாக அல்லாமல் பெருந்தோட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இத்தொகைகள் கிடைத்தன. ஆனால், இந்த அரசாங்கம் கட்சி பார்த்தும், ஆட்கள் பார்த்துமே 5 ஆயிரம் ரூபா நிவாரணக்கொடுப்பனவை வழங்குகின்றது. இது பெரும் அநியாயமாகும். எனவே, அரசாங்கத்துக்கும் எதிர்வரும் 5 ஆம் திகதி தக்கபாடம் புகட்டவேண்டும்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘இரத்தினபுரியில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பேன்’

இரத்தினபுரி வாழ் அனைத்து மதத்தவர்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு தான் முன்னின்று செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி நாற்சதுர சுவிசேஷ சபையின் போதகர் தேவ குமாரனை சந்தித்து ஆசிப் பெற்றுகொண்டதை அடுத்து, இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் இதுவரை பாதுகாக்கப்படாத நிலையில், அவர்களின் மத சுதந்திரத்திற்கும் தற்போது அச்சுறுத்தலான நிலைமைகள் காணப்படுவதாக தனக்கு அறிய கிடைத்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தமிழ் மக்கள் பிரதிநிதியொருவர் இல்லாமையே சிறுபான்மை சமூகம் தமது உரிமைகளை விட்டுகொடுக்க காரணம் என கூறிய அவர், இனி இரத்தினபுரி வாழ் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாவளனாவும், அவர்களின் குரலாகவும் தான் முன்னிற்பதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன், இதுவரை சிறுபான்மையினரால் இழக்கப்பட்டு வந்த உரிமைகளை தான் இனி ஒருபோதும் அவர்கள் இழப்பதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதன் ஊடாக, சிறுபான்மை சமூகத்தின் மதத் தலங்களின் மேம்பாட்டை துரிதப்படுத்த நிதியுதவிகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவிரல் புரட்சிமூலம் பலத்தை காட்டுவோம்!

“வாக்கு என்பது எமது பலம். உரிமைகளை வென்றெடுப்பதற்கான பலம்பொருந்திய ஜனநாயக ஆயுதம். எனவே, சலுகைகளுக்காக அந்த உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்ககூடாது என்பதுடன் தவறான நபர்களுக்கு ஆரவளிக்கும் வகையில் பயன்படுத்தவும்கூடாது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

“ அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தி மக்களிடமே இருக்கின்றது. அந்த மக்கள் சக்திக்கு முன்னால் அரசியல் ரீதியிலான ஏனைய சக்திகள் எல்லாம் இரண்டாம்நிலைதான். எனவே, தமது வாக்குபலத்தின் முக்கியத்துவத்தை மக்கள் இம்முறை நிச்சயம் உணர்த்தவேண்டும். ஒரு விரல் புரட்சிமூலம் சமுக முன்னேற்றத்துக்கான அடித்தளத்தை இத்தேர்தலில் இடவேண்டும் என உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கொள்கைகளையும், எதிர்கால திட்டங்களையும் முன்வைத்தே நாம் வாக்கு கேட்கின்றோம். குறிப்பாக மலையகத்தில் போதைப்பொருள் பாவனைக்கு முடிவு கட்டவேண்டும் என்பது எமது முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். எமது சமுகம் முன்நோக்க பயணிப்பதற்கு மதுபாவனையும் ஒரு தடையாக உள்ளமை கசப்பான உண்மையாகும். எனவேதான் மாற்றத்துக்கான எமது பயணத்தில் அதற்கும் முடிவு கட்டவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

ஆனால், எமது மக்கள் சாராயத்துக்கும், சோத்து பார்சலுக்கும் அடிமையானவர்கள் என நினைத்துக்கொண்டு, அவற்றை வழங்கி வாக்குகளை வேட்டையாடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். தமது அரசியல் இலாபத்துக்காக சமுதாயத்தை சீரழிப்பதற்குகூட அவர்கள் துணிந்துவிட்டனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கடும் எதிர்ப்பையும் வெளியிடுகின்றோம்.

மலையகம் இன்று விழித்துக்கொண்டுள்ளது. சாராயத்தையும், சோத்து பார்சலையும் வழங்கினால் சாதித்துவிடலாம் என நினைப்பது வெறும் மாயையாகும். அந்த குறுக்குவழி அரசியல் பயணத்தை இன்றைய இளைஞர்கள் எதிர்க்கின்றனர்.  எனது சமுகம் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்கு முயற்சிக்கின்றது. எனவே, எமது சமுகத்தை தவறாக எடைபோடும் நபர்களுக்கு ஆகஸ்ட் 5 ஆம் திகதி தக்கபாடம் புகட்டுவார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியால்தான் மலையகத்தில் மறுமலர்ச்சினை ஏற்படுத்தமுடியும். அதற்கு எம்மைபோன்ற புத்தாக்க சிந்தனைகொண்ட, புது யுகம் தொடர்பில் தூரநோக்கு சிந்தனைகொண்டவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அதற்கான ஆணையை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நிச்சயம் வழங்குவீர்கள் என நம்புகின்றேன்.” – என்றார்.

ஐஸ் போதைப்பொருளுடன் மஸ்கெலியாவில் இருவர் கைது!

கொழும்பு, வத்தளை பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகளாக வருகைதந்த நால்வரிடமிருந்து ஐஸ் போதைபொருள் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.பண்டார தெரிவித்தார்.
மஸ்கெலியாவில் உள்ள விடுதியொன்றுக்கு முன்னால் வைத்தே நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் இருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...