Home Blog Page 4057

கொரோனா பரிசோதனையின் போது உடைந்த கருவி – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

சவுதி அரேபியாவில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

சவுதிஅரேபியாவில் அதிக உடல் வெப்பநிலை காரணமாகக் குழந்தை ஒன்றை அவரின் பெற்றோர்கள் அங்கிருக்கும் ஷாக்ரா பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது மாதிரிகளை எடுக்க மூக்கினுள் விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது குச்சி உடைந்துள்ளது.

இந்தக் குச்சியை வெளியில் எடுக்க குழந்தைக்கு மயக்க மருந்தை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குழந்தை தனது சுயநினைவையும் இழந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 24 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை உயிரிழந்தது.இது குறித்து குழந்தையின் தந்தை அப்துல்லா அல் ஜவுபான் கூறுகையில், குழந்தைக்கு மயக்க மருந்தைக் கொடுக்க அனுமதி மறுத்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால், மருத்துவர்கள் இதை வலியுறுத்தியதாக கூறினார். அறுவைசிகிச்சை முடிந்த பிறகு, குழந்தைநல மருத்துவர் குழந்தையைப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு மருத்துவர் விடுப்பில் இருப்பதாகவும், சுவாசக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகக் குழந்தை சுயநினைவை இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக அவர் தெரிவித்தார்.

குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதாக உணர்ந்த அவர் குழந்தையை சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கேட்டுக்கொண்டார். அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகியுள்ளது.

இதனிடையே, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மரணம் மற்றும் நிலைமையை தவறாக கையாண்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குழந்தையின் தந்தை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெருக்கடியான தருணத்திலும் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தமிழ் ஆசிரியர் சமூகத்துக்கு செந்தில் தொண்டமான் பாராட்டு!

கொவிட் 19 வைரஸ் பரவல் குறித்த நெருக்காடியான சந்தர்ப்பத்திலும் ஊவா மாகாணத்தில் வாக்களித்த அனைத்து தமிழ் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் நன்றித் தெரிவித்துள்ளார்.

ஆளும் மற்றும் பொதுத் தேர்தலின் பின் அமையபோகும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் பலம்வாய்ந்த அமைச்சுப் பதவியை இ.தொ.காவுக்கு பெற்றுக்கொடுக்கும் முகமாக ஆசிரியர் சமூகம் பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்துக்கு வாக்களித்து பூரண ஆதரவை வழங்கியுள்ளது.

ஊவாவில் குறைப்பாடாக காணப்படட விஞ்ஞானப் பாடசாலையை உருவாக்கி வைத்தித்துறை கற்க பெருந்தோட்டப் பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைத்தது போன்று கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, மாத்தளை என பெருந்தோட்ட சமூகம் பரந்தப்பட்டளவில் வாழும் அனைத்து மாவட்டங்களிலும் கணித விஞ்ஞானக் கல்லூரிகளை அமைத்து அங்கும் பல வைத்தியர்களை உருவாக்க நடவடிக்கையெடுக்கப்படும்.

நான் செய்வதை மட்டுமே சொல்வேன். அதேபோன்று சொல்வதை மற்றுமே செய்பவன். ஏனைய அரசியல் வாதிகள் போன்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுபவன் அல்ல. புதிய அரசாங்கம் அமைய பெற்றதும் முதல் பணியாக ஆசிரியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை செய்துமுடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

‘மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மொட்டு ஆட்சி மலரும்’

அடிப்படைவாதிகளின் ஆதரவு இல்லாமல் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பலம்வாய்ந்த அரசாங்கமொன்று அமைக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும: கூறியவை வருமாறு,
” கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எமது அணிக்கு கிடைத்த வாக்குகளை அடிப்படையாகவைத்து பார்த்தால்  126 ஆசனங்கள் இலகுவில் கிடைத்துவிடும். அதேபோல் நுவரெலியா, வவுனியா , திருகோணமலை மற்றும் திகாமடுல்ல ஆகிய மாவட்டங்களையும் கைப்பற்றினால் அதன்மூலமும் ஆசனங்கள் கிடைக்கும்.
மறுபுறத்தில் கொழும்பு, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் கடந்தமுறையைவிட மூன்று ஆசனங்கள் அதிகம் கிடைக்கும். அத்துடன், அம்பாந்தோட்டை, காலி ஆகிய மாவட்டங்களில் இரண்டு ஆசனங்களை அதிகமாக பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
மொனறாகலை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் எமக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது. எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதில் சிக்கல் இருக்காது. ஆக அடிப்படைவாதிகள் இல்லாத பலமானதொரு அரசாங்கத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைக்கும்.” – என்றார்.

21 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி பிரச்சாரம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 21 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த தகவலை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உறுதிப்படுத்தினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 13 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்துக்கான பயணத்தை மேற்கொள்ளவிருந்தார்.

எனினும், பிரச்சாரங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பயணமும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் 21 ஆம் திகதி வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான கூட்டங்களில் ஜனாதிபதி கலந்துகொள்வார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன் தேர்தல் – சு.க. யோசனை!

உரிய திகதிக்கு முன்னர் தேர் தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செய லாளர் தயாசிறி ஜயசேகர நேற்று கோரிக்கை விடுத்தார்.

18 ஆம், 19 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நிறைவு பெறுமாக இருந்தால், 25ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பிரச்சினை அதிகரிக் கின்றது. நாம் கூட்டங்களுக்குச் செல்கின் றோம். மக்கள் கூட்டங்களுக்கு வருகின் றனர். நாம் மக்களுடன் நடமாடுகின் றோம். வேட்பாளர்களில் ஒருவர் அல் லது இருவருக்கு தொற்று ஏற்பட்டால், ஆயிரக்கணக்கானவர்களைத் தனி மைப்படுத்த வேண்டி ஏற்படும். அதன் போது, தேர்தல் அல்ல எதனையும் செய்ய முடியாமல் போகும்.

எனவே, நான் யோசனையயான்றை முன்வைக் கின்றேன். வர்த்தமானியை மாற்றிய மைத்து 25 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள் என அவர் கோரியுள்ளார்.

சலுகைகளுக்கு அடிபணிந்து ‘டீல்’ அரசியல் நடத்தமாட்டோம்!

“ஐக்கிய தேசியக்கட்சியுடன் எமக்கு எவ்வித ‘டீல்’ அரசியலும் கிடையாது.” – என்று ஜே.வி.பியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது கருஜயசூரிய போட்டியிட்டிருந்தால் தமது வேட்பாளரை தேசிய மக்கள் சக்தி விலக்கிக்கொள்ளவிருந்தது என முன்வைக்கப்படும் கருத்தை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். எமது அணியே முதலாவதாக மக்கள் மத்தியில் வேட்பாளரை அறிவித்தது. பின்வாங்குவதற்காக இருந்தால் எதற்காக அறிவிப்பு விடுக்கவேண்டும்?

அதேபோல் இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பிலும் எம்மை தொடர்புபடுத்தி சிலர் கருத்து வெளியிட்டுவருகின்றனர். இரண்டாம் வாக்கை இவருக்கு வழங்குமாறு எவரின் பெயரையும் நாம் பரிந்துரைக்கவில்லை. கற்பனை அடிப்படையிலேயே இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமக்கு எவ்வித அரசியல் டீலும் கிடையாது. மக்களுக்காக கொள்கை அடிப்படையிலேயே அரசியல் நடத்திவருகின்றோம். மக்கள் பக்கம்நின்று தீர்மானங்களை எடுப்போமேதவிர சலுகைகளுக்காக ஒருபோதும் அடிபணிந்து முடிவுகளை எடுத்ததில்லை. இனி எடுக்கபோவதுமில்லை.

நாம் உயிரை பணயம் வைத்து அரசியல் நடத்துகின்றோம். ஆனாலும் எமது பயணத்தை தடுப்பதற்கும், மக்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்புவதற்காகவுமே என்ஜிஓ, டொலர் போன்ற கதைகள் எல்லாம் கூறப்பட்டுவருகின்றன.

நாடாளுமன்றத்தில் நாம் பலமான சக்தியாகவேண்டும். அதற்கான ஆணையையே மக்களிடம் கேட்கின்றோம்.” – என்றார்.

மலையக இளைஞர்களை இன்று சந்திக்கிறார் சஜித்

மலையக  இளைஞர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு, ஹட்டன் டி.கே. டபிள்யூ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசனே இதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் உதயகுமார், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

மலையக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால திட்டங்கள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. எனவே, கட்டாயம் பங்கேற்று பயன்பெறுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மலையக குருவியின் செய்திக்கு சிவநேசன் மறுப்பு – பொலிஸில் முறையிடவும் நடவடிக்கை

தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் இருவருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக மலையக குருவியில் வெளியான  செய்திக்கு மேற்படி சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா சிவநேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாடொன்றை அடிப்படையாகக்கொண்டு குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்தாலும், அதில் எவ்வித உண்மையும் இல்லை என சிவநேசன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடிபோதையில் கீழே விழுந்ததால்தான் நபரொருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

” சம்பவம் நடைபெறும்போது நான் பங்களாவுக்குள்தான் இருந்தேன். சத்தம் கேட்டதும் என்ன நடந்தது என பார்வையிட சென்றேன். ஆனால், மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படுவதெல்லாம் பொய்யாகும்.” எனவும் கூறினார்.

மலையக குருவி வெளியிட்டிருந்த செய்தி வருமாறு,

கட்சிக்குள் சண்டை – சிவா, பத்மா முட்டி மோதல்!உடைந்தது ஒருவரின் மண்டை!!

உலகளவில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து 77 லட்சம் பேர் மீண்டனர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 76 ஆயிரத்து 674 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 76 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 32 லட்சத்து 36  ஆயிரத்து 80  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 77 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

80 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது? பதிலடி கொடுத்தார் ரமேஷ்

நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 5 வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வார்கள். அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானே அதிக விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார். அப்போது தெரியும் ஜீவன் தொண்டமான் பெரியவரா? சிறியவரா என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

நோர்வூட் நியுவெளி தோட்டத்தில் 14.7.2020 நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

மலையக மக்கள் ஏனைய சமூகங்களுக்கு நிகராக வாழும் சூழலை ஏற்ப்படுத்திக் கொடுத்தவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான். நீங்கள் இன்று பிரதேச சபைகளிலோ,மாகாண சபைகளிலோ, பாராளுமன்றத்திலோ இருப்பதற்கு வாக்கு உரிமையை பெற்றுக்கொடுத்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களே.

அதனை இன்று சிலர் மறந்துவிட்டு வாய்க்கு வந்ததை பேசி திரிகின்றனர். வாய்க்கு வந்ததை பேசுபவர்கள் நல்ல தலைவர்களாக இருக்க முடியாது. முதலில் குறை கூறும் அரசியலை நிறுத்துங்கள். 1000 ரூபா சம்பளத்தை வைத்து அரசியல் நடத்த சிலர் முனைகின்றனர்.

1000 ரூபா சம்பளம் நிச்சயமாக கிடைக்கும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. நாங்கள் 80 வருடங்கள் என்ன செய்தோம் என்கின்றனர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்ததை பட்டியலிட்டு காட்ட இயலாது. எண்ணில் அடங்காத சேவைகளை செய்துள்ளது. இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளை அனைத்தையும் பெற்றுக்கொடுத்ததே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்தான். அதனை முழு மலையகமும் நாடும் அறியும்.

நாம் ஏனைய சமூகங்களுக்கு நிகராக வாழ்வதற்கு சகல உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தவர் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான். வருடத்தில் ஆறாவது மாதமும் பன்னிரண்டாவது மாதமும் கூடும் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இல்லை.

மலையக மக்களுக்காக குரல் கொடுக்கும் மாபெரும் அமைப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். எனவே இன்று நாம் செல்லும் மக்கள் சந்திப்புக்கெல்லாம் அலை அலையாய் இளைஞர்கள் கூடுகின்றார்கள். ஜீவன் தொண்டமானின் தலைமத்துவத்தை இன்று இளைஞர்கள் முதல் அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் எனவே நாங்கள் 5 வேட்பாளர்களும் அமோக வெற்றி பெறுவது உறுதி என்றார்.

தலவாக்கலை பி.கேதீஸ்

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...