அமைச்சரானார் வன்னியரசு!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று இணைந்து கொண்ட விசிகவின் வன்னியரசுக்கும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி வன்னியரசி சமூகநீதித் துறை அமைச்சரானார். இந்தத் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் அடங்கும்.

ஏ.எம்.ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரானார். அவரது துறையின் கீழ் சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் அடங்கும்.

முன்னதாக, இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விசிகவின் வன்னியரசு, ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்களாக, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வன்னியரசு பாபநாசம் தொகுதியிலும், ஷாஜஹான் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles