அரசியல் இலஞ்சவாதிகள் தமிழினத்தின் துரோகிகள்

“அரசியல் இலஞ்சம் பெறுகின்றவர்கள், கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக் கொடுப்பார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை.”

– இவ்வாறு இலங்கைத் தமிழசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை மூலமாக சமூகச் சீரழிவை ஏற்படுத்துவது தொடர்பில் நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். இது தொடர்பில் பலவிதமான வேலைத்திட்டங்களைப் பல காலமாகச் செய்து வருகின்றோம்.

அரசியல் இலஞ்சமாக சமூக விரோத செயற்பாட்டுடன் தொடர்புடைய மதுபான சாலைகள் வழங்கப்பட்டமை பிரதான விடயமாகப் பார்க்கப்பட வேண்டும். அதில் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் சம்பந்தப்பட்டிருந்தார்கள், தாமாகவே தேர்தல் அரசியலிலிருந்து விலகினார்கள். ஆனால், பலர் வாய்மூடி மெளனிகளாக இருக்கின்றார்கள்.

ஆகவே, இது தொடர்பாக மக்கள் தமது கரிசனையைச் செலுத்தவேண்டும். அரசியல் இலஞ்சம் பெறுகின்றவர்கள், கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக் கொடுப்பார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை.

தங்களுடைய சொந்த நலன்களுக்காகச் சொத்துக்களைக் குவிப்பதற்காகப் பலர் இவ்வாறு செயற்படுகின்றார்கள்.

அவர்களை அடையாளம் கண்டு மக்கள் சரியான விதத்தில் செயற்படவேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.” – என்றார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles