அவசரகால சட்டத்தை இரத்து செய்யவும் – எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் வலியுறுத்து

நாட்டில் நேற்று (06) நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அரசமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே ஜனாதிபதி இவ்வாறு அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், அத்தியாவசிய சேவைகளை தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும், காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகை வளாக போராட்டக்காரர்களை அகற்றுவதற்காகவும், மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவுமே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என சமூக செயற்பாட்டாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதற்கு தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. தனது முடிவை ஜனாதிபதி உடன் மீளப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, சமகால நிலைமைக்கு அவசரகால சட்டம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அச்சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுக்கூடுதல் என்பன பொதுமக்களின் அடிப்படை உரிமைகளாகும்.

இந்த நிலையில், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் என்பனவற்றுக்கு, அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, அவசரகால சட்ட பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles