வடக்கு, கிழக்கு உட்பட 4 மாகாணங்களின் ஆளுநர்களுக்கு பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தால் தமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேல், வடமேல், வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் ஆளுநர்களையே இவ்வாறு பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக ஆகியோர் முன்னாள் படைத்தளபதிகளாவர்.
அதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கும் முடிவுக்கு தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. கடும் போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புகளின் கூட்டணியே தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியமாகும். அதில் முக்கிய நபராக கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தயாகமகே, பாலிய ரங்கே பண்டார, நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
