ஜே.வி.பிதான் வன்முறையை தூண்டியது – அமைச்சர் காஞ்சன கண்டுபிடிப்பு

ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்களின் கருத்துக்கள் குரோதமான பேச்சுக்கள் காரணமாகவே வன்முறை வெடித்தது. அலரி மாளிகைக்கு வந்து விட்டு அமைதியாக வீடுகளுக்கு சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

வன்முறையில் எம்.பிகள் உட்பட அரசியல் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டது தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

கொலையுடன் தொடர்புள்ளவர்களை கைதுசெய்ய வேண்டும். இதற்கு தலைமை தாக்கியவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். 119 பேர் அரசாங்கம் சார்பில் 76 எம்.பிகள் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. சிலரின் அனைத்து சொத்துக்களும் அழிக்கப்பட்டன. ஏப்ரல் மாதத்தில் எமது எம்.பிகளின் வீடுகள் தாக்கப்பட்டன. மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தின் காரணமாக எமது வீடுகள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

திட்டமிட்ட வகையில் எமது வீடுகளை சுற்றிவளைக்க எதிரணி வழிகாட்டின.ஜே.வி.பி தலைவர்கள், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்களின் கருத்துக்கள் குரோதமான பேச்சுக்கள் இதற்கு காரணமாக அமைந்தன. அரசியலமைப்பின் ஊடாக முடியாவிட்டால் வேறு வழியில் மாற்றுவதாக தெரிவித்தார்கள்.ஜனாதிபதியை துரத்த உதவாதவர்களை தாக்குமாறு கோரினார்கள்.எம்.பிகளின் உரிமைகளை பாதுகாப்பது சபாநாயகரின் பொறுப்பாகும். எமது நிலைப்பாட்டை மாற்றி ஜனாதிபதியை துரத்தும் முயற்சி வெற்றியளிக்காது. அரச வாகனங்கள் கூட தீவைக்கப்பட்டுள்ளன.

மக்களின் பணத்திலே அவற்றை திருத்த வேண்டியுள்ளது. அரசியல் ரீதியில் பரப்பப்பட்ட 88- – 89 கால கலவரம் மீண்டும் வேறு வழியில் முன்னெடுக்கப்படுகிறது. கடந்த 6-, 7 மாதங்களில் எதிரணி முன்வைத்த உரைகளை ஆராய வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles