புதையல் தோண்டிய ஐவர் கைது!

புத்தளம் – கருவலகஸ்வெவ நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் விளக்கேற்றி பூஜை செய்து, புதையல் தோண்ட முற்பட்ட ஐந்து பேரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சனிக்கிழமை (13) கைது செய்துள்ளனர்.

நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் விளக்கேற்றி பூஜை செய்த பின்னர், புதையல் எடுப்பதற்காக நிலத்தை தோண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிக்கவெரட்டிய, வித்திக்குலிய மற்றும் நவகத்தேகம பகுதிகளைச் சேர்ந்த 5 நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, அலவாங்கு, பூஜைக்கு பயன்படுத்திய விளக்கு, இரண்டு மோட்டார் சைக்கள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் திணைக்களத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளில் கருவலகஸ்வெவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles