மலையக பல்கலைக்கழகம் தொடர்பில் இன்று எடுக்கப்பட்ட விசேட முடிவு…..!

மலையகத்துக்கான தனியான பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று  கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் இன்று நடைபெற்றது.

இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பின்பேரில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கொட்டகலைக்கு வந்து, இச்சந்திப்பில் பங்கேற்றார் என அமைச்சரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு ஏற்கனவே உரிய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இதற்கான திட்டங்களை இறுதிப்படுத்துவதற்கான சந்திப்பாகவே இது அமைந்தது.

இதன்படி கொட்டகலை ஆசிரியர் கலாசாலையை கேந்திரமாக கொண்டு பல்லைக்கழகத்தின் முதற்கட்ட தொகுதியினை நிறுவுவதற்கும் மேலதிக இடம் தேவையெனில் அதனை பெறுவதற்கும் இணக்கம் காணப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பல்லைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாட திட்டங்கள் பற்றியும் இச்சந்திப்பின்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், பிரதி தவிசாளர் பி. இராஜதுரை, உப தலைவர்களான பிலிப்குமார், எம்.சச்சிதானந்தன், நுவரெலியா, கொட்டகலை, மஸ்கெலியா, அக்கரப்பத்தனை ஆகிய பிரதேச சபைகளுக்கான முன்னாள் தவிசாளர்கள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், பிரத்யேக உதவியாளர் தயாளன் குமாரசுவாமி, புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.ரூபதர்ஷன், நுவரெலியா வலய கல்வி பணிப்பாளர், கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் பீடாதிபதி, விரிவுரையாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles