மாணவன் செலுத்திய வேன் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில்  

கொழும்பு  பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவன் செலுத்திச் சென்ற வேன் ஒன்று மோதியதில் கொள்ளுப்பிட்டி காலி வீதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்து வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளுப்பிட்டி காலி வீதியில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், குறித்த  வேனை நிறுத்துமாறு சைகை செய்துள்ளார்.

இதன்போது வேனை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் மாணவனால் வேனைக் கட்டுப்படுத்த முடியாமல் கான்ஸ்டபிளை மோதியதில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles