சஜித் ஆட்சியில் சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: காணி உரிமையும் நிச்சயம்!

“ ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றிபெறுவார். அதன்பின்னர் மலையக மக்களுக்கு நில உரிமை பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை நகரில் நடைப்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனக்கு நம்பிக்கை இருக்கின்றது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு மலையக மக்கள் வாக்களிப்பார்கள். சஜித் பிரேமதாஸவின் தந்தையே எமக்கு பிரஜா உரிமையை பெற்றுக்கொடுத்தார். அதனை நாம் மறந்துவிட கூடாது. அதேபோலவே சஜித் பிரேமதாசவும் பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் என எனக்கு உறுதியளித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் சிலர் உங்களிடம் சீமெந்து, அரிசி, பருப்பு போன்ற பொருள்களுடன் வந்து வாக்கு கேட்பார்கள். நீங்கள் யாரும் அவர்களுக்கு வாக்குகளை வழங்காதீர்கள். அரிசி, பருப்பு நமக்கு தேவையில்லை. நிலவுரிமையே எமக்கு வேண்டும். நான் அமைச்சராக இருந்தபொழுது 7 பேர்ச்சஸ் காணியை பெற்று அதில் வீடுகளை கட்டி கொடுத்தேன். அப்போது என்னை பலர் கிண்டல் செய்தார்கள். 10 பேர்ச்சஸ் அல்லது 20 பேர்ச்சஸ் காணி கேளுங்கள் என்று. ஆனால் மலையகத்தில் எத்தனையோ.

அமைச்சர்கள் இருந்தார்கள் அவர்கள் யாரும் நான் மலையகத்தில் செய்த சேவைகளை யாருமே செய்யவில்லை. 2015 முதல் 2019 வரை மலையகத்தில் பல்வேறு அபிவி ருத்தி திட்டங்களை முன்னெடுத்தவன் நான் என்பதை பெருமையாகக் கூறுவேன். எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே உங்களது வாக்களிப்பீர்கள் என நம்புகின்றேன்.”- என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles