செத்தாலும் காங்கிரஸ் காரனாகவே சாவேன் – வேலுயோகராஜ் சபதம்! கந்தப்பளை காணி குறித்தும் மௌனம் கலைப்பு!!

” இ.தொ.கா. என்பது எனது  தாய்வீடு .   என்னை வெட்டிப் போட்டாலும் காங்கிரஸை விட்டு போகமாட்டேன்.”

இவ்வாறு  நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலுயோகராஜ் சூளுரைத்துள்ளார்.

நுவரெலியா பிரதேச சபையின் அமர்வு இன்று நடைபெற்றது.

கந்தப்பளை காணி விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

 இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஊடாக குறித்த காணியை கோயில் நிர்வாகத்துக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டப்போதிலும் , அதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால்  அதனை பொறுப்பேற்க பிரதேசசபை மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில்,  காணியை நான் விற்றுவிட்டேன் என பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. பணமோசடி செய்தேன் என்பது உண்மைக்கு புறம்பான தகவலாகும்.  இந்த காணிக்கான பணத்தினை,  எங்கு யாரிடம் பெற்றேன் என்பதை நீதிமன்ற ஊடாக நிருபித்து   தண்டனை வழங்கினால் அதனை ஏற்க நான் தயாராக உள்ளேன்.  குறித்த காணி தற்போது  காணி சீர்திருத்த ஆணைகுழுவின் கீழ் உள்ளது.” – என்றார்.

 டி சந்ரு

Related Articles

Latest Articles