பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம் பறிக்கும் கொழுந்தின் நிறைக்கேற்ப சம்பளம் வழங்கும் முறையை செயல்படுத்தினால் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 3000 ரூபாய் சம்பளம் பெற்றுக் கொள்ள முடியுமென தோட்ட முதலாளிமார் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி தோட்டத் தொழிலாளி ஒருவர் நாளாந்தம் பறிக்கும் கொழுந்தின் நிறைய அதிகரித்துக் கொண்டால் அவர்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபாவுக்கு அதிகமான சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமென இலங்கை தோட்ட முதலாளிமார் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை தெரிவிக்கின்றார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வழங்கப்படுகிறது. இத்தொகை போதுமானதல்ல என்பதை தோட்ட கம்பெனிகள் ஏற்றுக் கொள்கின்றன என்றும் அதனால் வேலைக்கேற்ப
சம்பளம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தோட்டத் தொழிற்சங்கங்களின் ஆதரவை பெற்றுக் கொடுக்க வேண்டுமென ராஜதுரை குறிப்பிட்டுள்ளார்.