பண்டாரவளையில் 58 பேர், கோவிட் 19 தொற்றுக்கிலக்காகியிருப்பதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். சுரேஸ்குமார் தெரிவித்தார்.
பண்டாரவளை பொது சுகாதாரப் பணியகத்தில் 20-11-2021ல் (இன்று) நடைபெற்ற ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனையின் போதே, மேற்கண்ட தொற்றாளர்கள் 58 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

(இன்றைய தினம்) 20-11-2021ல் 153 பேருக்கு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ன. அவர்களில் 58 பேர், தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தத்தம் வீடுகளிலேயே, பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்புக்களில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
