இன்று மாலை வாக்கெடுப்பு: வெளிநாடு சென்றிருந்த எம்.பிக்களும் நாடு திரும்பினர்

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
வெளிநாடுகளுக்கு பறந்திருந்த அமைச்சர்கள் அவசரமாக நாடு திரும்பியுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்த மேலும் சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பயணத்தை பிற்போட்டுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் 19 ஆம் திகதி ஆரம்பமானது. முன்னதாக 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், எதிரணியின்கோரிக்கையின் பிரகாரம் விவாத்துக்கு மேலும் ஒருநாள் ஒதுக்கப்பட்டது.
குறித்த பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மையை ஆளுங்கட்சி உறுதிப்படுத்தியுள்ளது என அறியமுடிகின்றது.

எனினும், சபாநாயகர்மீது எதிரணிகளுக்கு நம்பிக்கையில்லை என்ற விடயம் இதன்மூலம் எடுத்துக்காட்டப்படும் என எதிரணிகள் தெரிவித்துள்ளன. இன்றைய தினம் கட்சி தாவலுக்கும் சாத்தியம் இருப்பதாக தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles