ட்ரம்ப் நோபல் பரிசுக்கு தகுதியானவர்: ஜப்பான் பிரதமர் ஆதரவு குரல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்க ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் பயணம் மேற்கொண்டு வரும் ட்ரம்ப், மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு, தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட அவர் மத்தியஸ்தம் செய்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து ஜப்பான் சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் புதிய பிரதமர் சனே தகைச்சியைச் சந்தித்து பேசசு; நடத்தினார்.

இதன்போது டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பதை ஜப்பான் ஆதரிப்பதாக சனே தகைச்சி கூறியதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் தனியாக அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட தகைச்சி, “தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்வதில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். மேலும், மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சாதனையாகும்” என தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பயணத்தைத் தொடர்ந்து ட்ரம்ப், தென் கொரியா செல்கிறார். அங்கு நடைபெற இருக்கும் ஆசியா – பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், உச்சி மாநாட்டின் இடையே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடி வரும் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும், அதற்கு முன்பு வரை அந்த விருதுக்காக ட்ரம்ப் தொடர்ந்து போராடினார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர், தாய்லாந்து – கம்போடியா இடையிலான போர், இஸ்ரேல் – காசா இடையேயான போர் உட்பட 8 போர்களை தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.

ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என இஸ்ரேல், பாகிஸ்தான், கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளின் தலைவர்கள் வெளிப்படையாக தெரிவித்தனர். இவர்களின் வரிசையில் ஜப்பான் பிரதமரும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles