ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை உடன் நிறுத்துமாறு சீனா வலியுறுத்து!

அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான Ishaq Dar சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

பீஜிங்கில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது பிராந்திய மோதல்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

ஈரானில் நடைபெற்று வரும் போர் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.

போரினால் ஈரானில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் சேதமடைவதற்கு சீனா தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களைக் கடுமையாக எதிர்ப்பதுடன், அமைதியை நிலைநாட்டத் தொடர்ந்து முயற்சிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சீனா தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles