முடிவுக்கு வருமா போர்? இஸ்லாமாபாத்தில் இன்று அமைதி பேச்சு!

ஈரான் மற்றும் அமெரிக்கவுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் விரைந்துள்ளனர்.

ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28-ம் திகதி முதல் போர் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 8-ம் திகதி இருவாரகால போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் பங்கேற்கும் அமைதிப் பேச்சு இன்று நடைபெறுகிறது.

சமரச தூதர்களாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர், வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் ஆகியோர் செயல்பட உள்ளனர்.

அமைதி முயற்சியை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது. மத்திய கிழக்கில் நீடித்த அமைதியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles