ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இப்போட்டி நடைபெறும்.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி மிகவும் வலிமையான அணியாக உருவெடுத்துள்ளது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளை குவித்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற அந்த அணி அடுத்தடுத்த 2 ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்துள்ளது.










