தாக்குதலை உடன் நிறுத்துமாறு ட்ரம்ப் வலியுறுத்து!

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் தனது பதிலடித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமைதி காக்குமாறு ட்ரம்ப் வலியுறுத்தினார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இந்த அறிவுறுத்தலை பின்பற்றாது ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருந்தது. இந்நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறானதொரு வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

 

 

Related Articles

Latest Articles