மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. அம்மாகாணத்தில் நேற்றைய தினமும் 165 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 24 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 83 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 58 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.










