தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல தமிழ் முற்போக்கு கூட்டணி . இது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மக்கள் கூட்டணி. அதன் காரணமாகவே இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான விஜேசந்திரன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற பிரதான கட்சியாக இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி திகழ்கின்றது.
மலையக மக்கள் முன்னணி தொழிலாளர் தேசிய சங்கம் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய முக்கிய மூன்று அமைப்புகளை ஒன்றினைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே இந்த அமைப்பாகும். தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆறு வருடங்களாக ஒரே பாதையில் பயணித்து இலங்கையின் அரசியல் தளத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பதிவு செய்து கொண்டுள்ள காரணத்தால் இந்த அமைப்பை ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாக இலங்கை தேர்தல்கள் ஆணையாளர் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.அதற்கு டோச் லைட் சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு கூட்டணியாக செயற்பட்டு 6 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்கின்ற அளவிற்கு கடந்த காலங்களில் இதன் வளர்ச்சி இருந்திருக்கின்றது.
இந்த கட்சியை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து கொள்வதற்காக இதற்காக முழுமையாக ஒத்துழைத்த இதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அதன் செயளலார் நாயகம் சந்திரா சாப்டர் உட்பட அனைவரையும் பாராட்டுகின்றேன்.
இந்த முயற்சியில் தொடர்ச்சியாக பங்களிப்பு செய்த ஆரம்ப கால செயலாளராக இருந்த ஏ.லோரன்ஸ் அவர்களுடைய பங்களிப்பு அளப்பரியது அவரையும் இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது இன்று இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு மைக்கல்லை எட்டி இருக்கின்றது.ஏனைய கூட்டணிகளுக்கு ஒரு முன்மாதிரியாக செயற்பட்டு வருகின்றது.இலங்கையில் பல கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டாலும் அவை ஒரு குறுகிய காலத்தில் இல்லாமல் போயுள்ளது.இந்த நிலைமை மலையகத்திலும் ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டணி தனியே மலையகத்தை மாத்திரம் அல்லாமல் கொழும்பு உட்பட ஏனைய மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு அமைப்பாக இருக்கின்றது.அனைத்து சமூகங்களையும் இணைத்துக் கொண்டு முன்நோக்கி செல்வதே இந்த கூட்டணியின் எதிர்பார்ப்பாகும்.
இந்த கூட்டணி வெறுமனே அரசியல் கூட்டணியாக இல்லாமல் மக்களின் நலன் கருத்தில் கொண்டும் அனைவரும் ஒன்றினைந்து செய்றபட வேண்டும் என்ற நோக்கத்துடனும் செயற்பட்டதன் காரணமாகவே இன்று இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி இலங்கையின் அரசியலில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்ற பிரதாக அரசியல் கட்சியாக உருவெடுப்பதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானதாகும்.
எனவே மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் என்ற வகையில் எங்களுடைய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் முழுமையான ஒத்துழைப்புடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதோடு இதன் வளர்ச்சிக்கு எங்களுடைய முழுமையான ஒத்துழைப்பையும் வழங்குவோம்.
விசேடமாக இந்த அமைப்பை இதுவரை காலமும் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் பிரதித் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அனைவரும் தொடர்ந்தும் ஒற்றுமையாக செயற்பட்டு இந்த அமைப்பை இலங்கையின் அரசியலில் ஒரு முக்கிய கட்சியாக உருவாக்க வேண்டும்.
அதே நேரம் தமிழ் முற்போக்கு கூட்டணி தமிழ் பேசும் மக்களின் காவலனாகவும் அனைவரையும் அனைத்து செல்லுகின்ற ஒரு அமைப்பாகவும் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
