சபை அமர்வை புறக்கணித்தது ஐக்கிய மக்கள் சக்தி!

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய சபை அமர்வை புறக்கணித்திருந்தது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. எனினும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபை அமர்வில் பங்கேற்கவில்லை.

எதிரணி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை, சபை அமர்வில் பங்கேற்கப்போவதில்லை என நேற்று முன்தினம் சனிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles