மத்திய மாகாணத்தில் 5000 டெங்கு நோயாளர்கள்
மத்திய மாகாணத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5000 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சி பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அவர்களின் ஆய்வின்படி கண்டி மாவட்டத்தில் 3957 டெங்கு நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 861...
வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு ஒரு வேளை உணவை வழங்குவதிலும் பெரும் சிக்கல்
மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக சில வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் சுகாதார உதவி பணியாளர்களுக்கு ஒரு வேளை உணவை வழங்குவது பெரிய சிக்கலாக மாறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களை விநியோகிப்போருக்கு...
எரிபொருள் விலை குறைந்தால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம்-ஜனக ரத்நாயக்க
எதிர்காலத்தில் எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உயர் மின் கட்டணத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வேண்டும் என்றால் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும்...
வட்டி வீத அதிகரிப்பினால் 2023இல் பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்பு
உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகளால் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டிருப்பது 2023இல் உலகில் பொருளாதார மந்தநிலை ஒன்றைத் தூண்டும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
அதிகரித்து வரும் விலையேற்றத்தை சமாளிக்க கடந்த பத்து தசாப்தங்களில் காணாத...
இங்கிலாந்து செல்லவுள்ளார் ஜனாதிபதி
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இங்கிலாந்து செல்லவுள்ளார்.
இன்று இலங்கையிலிருந்து புறப்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெறும்...
‘இந்தியாவின் ஆதரவு இல்லையேல் ஜெனிவாவில் இலங்கை மண்கவ்வும்’
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையானது இந்தியாவின் ஆதரவை வெல்லும் பட்சத்தில் மேலும் 10 நாடுகள் இலங்கை பக்கம் சாயும்." - என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும்,...
சர்வதேச வர்த்தகத்தை கையாள விசேட அலுவலகம்!
சர்வதேச வர்த்தகத்தை கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகத்தை நிறுவ இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களுக்கான பணிகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்தியாவின்...
வார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் விதம்
நாளை 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை 1 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மாலை...
நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மைத்திரிக்கு உத்தரவு
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதிமான் மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பும்படி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார்.
2019 ஆம் ஆண்டு...
வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு ( படங்கள்)
வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இரண்டு வெளிநாட்டு தூதுவர்கள் இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவராக...












