300 லீற்றர் டீசலை பதுக்கியவர் யாழில் கைது!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று மாலை கைது செய்தனர்.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீடு ஒன்றில் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் பொலிசாருக்கு...
‘குட்பாய்’ கூறினார் பிரிட்டன் பிரதமர்!
இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார்.
நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர்...
‘பாஸ்போட்’ வரிசையில் பிரசவிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு அருகில் இன்று காலை பிரசவிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்த எடை காரணமாக பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதே நேரம் குறித்த தாய் தற்போது நலமுடன்...
9 ஆம் திகதி போராட்டத்துக்கு மலையக மக்களும் ஆதரவு!
“கோட்டா உடன் வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் நாளைமறுதினம் சனிக்கிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றிவளைப்பது மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருக்களுக்கு வந்து அமைதியான முறையில் அரச எதிர்ப்பு...
சுகாதார ஊழியர்களுக்கு நாளை எரிபொருள் வழங்குவதை இரத்து செய்தது சுகாதார அமைச்சு
எரிபொருள் வழங்குவது தொடர்பாக சுகாதார ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதை நாளை இரத்து செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், எரிபொருள் விநியோகிக்கும்...
போராட்டத்தை இடைநிறுத்த கோரி பொலிஸார் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு
நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) கொழும்பு-கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துவதற்காக உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும்,...
9 ஆம் திகதி ஊரடங்கு அமுலாகுமா?
நாட்டில் எதிர்வரும் 9 ஆம் திகதி அவசரகால சட்டத்தையோ அல்லது அவசரகால நிலையையோ பிரகடனப்படுத்துவது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர்...
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை...
குடும்பஸ்தர் வெட்டிப்படுகொலை! மூவர் கைது!
மட்டக்களப்பு , சந்திவௌி பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமது உறவினர்களால் நேற்றிரவு(06) குறித்த நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவௌி பிரதான...
‘பணவீக்கம் 70 வீதமாக அதிகரிக்கக்கூடும்’
பணவீக்கமானது, அடுத்த சில மாதங்களில் 70 வீதமாக அதிகரிக்கலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
எனினும், 2023...










