தமிழருக்கான விடுதலையை சர்வதேசம் பெற்று தரும் – சம்பந்தன் நம்பிக்கை
"தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட வேண்டும். அந்த நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தாவிடினும் சர்வதேச சமூகம் ஏற்படுத்தியே தீரும். அந்த நம்பிக்கை இன்னமும் வீண்போகவில்லை."
– இவ்வாறு தமிழ்த் தேசியக்...
உணவுப் பற்றாக்குறையால் பெருந்தோட்ட மக்களே பெரிதும் பாதிப்பு – உலக உணவு திட்டம் சுட்டிக்காட்டு
உணவுப் பற்றாக்குறை காரணமாக நகர்புற, கிராமபுற மக்களை காட்டிலும் பெருந்தோட்ட மக்களே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சுமார் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையுடன் இருப்பதாகவும் உலக...
தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் – சர்வக்கட்சி அரசமைக்க எதிரணிகள் சங்கமம்
சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்காக எதிரணிகளை ஓரணியில் திரட்டி - பொது நிலைப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான இரண்டாம் சுற்று பேச்சு இன்று (06) நடைபெற்ற நிலையில், முக்கியமான சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...
பஸிலின் சகாக்களே 22 ஐ எதிர்க்கின்றனர் – விமல் குற்றச்சாட்டு!
பஸில் ராஜபக்சவை பாதுகாக்க முற்பட்டவர்களே அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்க்கின்றனர் - என்று விமல் வீரசன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில்...
‘இலங்கையில் கொவிட் மரணம் பதிவு’
இலங்கையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா மரணமொன்று நேற்று பதிவாகியுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, நாட்டில் இன்று மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியமின்றி இலங்கை செல்ல வேண்டாம்-பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து அறிவிப்பு
அத்தியாவசிய விடயங்களை தவிர இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் தமது நாட்டு பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன.
நேற்று (05) புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைக்கு அமைய இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு...
மீண்டும் சீமெந்து விலை அதிகரிப்பு
50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை 3,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது.
ஒரு வருட காலத்திற்கு முன்னர்...
முறிந்து விழுந்தது மரம் – வீடு முற்றாக சேதம்
வெளிமடை டயரபா மேற்பிரிவு தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று தோட்ட குடியிருப்பில் சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்த பெண் ஒருவர் காயம்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (05.07.2022) இரவு...
ஹிருணிகா பிணையில் விடுதலை
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு கோட்டையில்...
நாட்டில் இன்று வரிசையில் இருந்து பொதுமக்கள் இறப்பது, இயற்கையானது அல்ல கொலை-விஜித ஹேரத்
அரசாங்கம் விவசாயத்துக்காக உரத்தை வழங்குவதாக உறுதியளித்தாலும், சிறுபோகக் காலம் முடிவடைந்து விட்டது.
எனவே இந்த உரத்தை அரசாங்கம் தந்தாலும், அது பெரும்போக காலத்திலேயே வழங்கக்கூடியதாக இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...












