ஜனாதிபதியின் ஆதரவாளர்களை அடித்து விரட்டிய குழுவினர்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு வந்த குழுவொன்றை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினர் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கு பிறகு மின்வெட்டு எவ்வாறு அமுலாகும்? வெளியானது அறிவிப்பு!
ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தை மேலும் குறைக்க கூடியதாக இருக்கும் என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த...
பதவி துறக்கிறாரா பிரதமர் மஹிந்த? இன்றிரவு வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு!!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அவரின் உரை மாலை 6.45 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக...
டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி 330 ரூபாவாக பெரும்பாலான தனியார் வங்கிகளில் காணப்படுகிறது.
மேலும் கொள்வனவு பெறுமதி 310 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கை வரலாற்றில் பதிவான அதிகளவான விற்பனை...
‘எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மற்றுமொருவரும் மரணம்’
எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் இன்று (11) உயிரிழந்துள்ளார்.இதன்படி வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து ஏற்பட்ட தாக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.
காலி, தவலம பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு...
‘எரிபொருள் களவாடிய நால்வர் கைது’
அலுத்கம பொலிஸ் பிரிவிலுள்ள சில பிரதேசங்களிலும் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களில் இருந்து பெற்றோலை , பிளாஸ்டிக் கொள்கலன்களில் திருடிச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு சம்பவங்கள் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து...
யாழில் பெரும் சோகம் – விபத்தில் சிறுவன் பலி!
யாழ். நகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை, பின்னால் சென்ற பாரவூர்தி மோதியுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து...
‘கோட்டா கோ கிராமம் ‘ உதயமானது!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு 'கோட்டா கோ கிராமம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கூகுள் வழிகாட்டலிலும்...
’21’ ஐ நிறைவேற்றாமல் அமையும் ‘காபந்து அரசு’ ‘கால்பந்து அரசாகவே’ அமையும் – மனோ
" ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20 ஆம் திருத்தத்தை அகற்றி, நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ஆம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ஆ ம் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம்....
‘போராட்டத்துக்கு ஆதரவு வழங்குங்கள் – ரணில் வேண்டுகோள்
நாட்டில் தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை இளைஞர் சமூகத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டிலுள்ள...











