மீண்டும் உயர் நீதிமன்றில் ரஞ்சன்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் உயர்நீதிமன்றில் இன்று(24) முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவர் நான்காண்டுகால...
புதிய அரசமைப்பு – பணியை நிறைவு செய்தது நிபுணர் குழு! வரைவு நகல் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிப்பு
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைவொன்றை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிபுணர்கள் குழு அப்பணியை நிறைவு செய்துள்ளது.
கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற செயற்பாடுகளின் அடிப்படையில் தற்போது இக்குழுவானது தனது...
நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா – ஒரு வாரத்தில் 5,391 பேருக்கு வைரஸ் தொற்று!
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. கடந்த ஒரு வார காலத்தில் 5,391 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஒரு வார காலத்தில் 87 கொரோனா...
கடும் வறட்சி! மலைநாட்டில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக குறைவு!!
மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வேகமாக குறைந்து வருகிறது.
காசல்ரி,மவுசாகலை,கெனியோன், லக்ஸபான,நவலக்ஸபான, விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளன.
தேசிய மின் உற்பத்திக்கு பாரிய அளவில்...
‘மின்நெருக்கடி உச்சம்’ – தெரு விளக்குகளிலும் கை வைக்கிறது அமைச்சு!
நாட்டில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில், கலந்துரையாடி தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசின் வாராந்த அமைச்சரவைக்...
இன்று முதல் மின்வெட்டு அமுல்!
நாட்டில் இன்று திங்கட்கிழமை ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் இரு மணிநேரம் மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பிற்பகல்2 மணி முதல்...
நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள்
நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று (22) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை...
போதைப் பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற 27 பேர் கைது!
போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 27 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் காணப்பட்ட கஞ்சா மற்றும் போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நல்லதண்ணி மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து சந்தேகநபர்களை கைது...
ஆளுங்கட்சி எம்.பி. கோகிலாவுக்கு கொரோனா!
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தனவுக்கும்
கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன், அவரன் கணவர் மற்றும் மகளுக்கும் வைரஸ் தொற்று
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிகிச்சைகளுக்காக அவர் தனியார் வைத்தியசாலையொன்றில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைவர் பதவியை மறுத்த லசந்த விக்ரமசிங்க
வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லசந்த விக்ரமசிங்க, அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லசந்த விக்ரமசிங்க கடிதம் மூலம் இதனை நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்...











