தண்டவாள ஆணிகளை அகற்றும் போதைப்பொருள் அடிமைகள்

0
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் போதைப்பொருள் வாங்குவதற்காக  புகையிரத தண்டவாளங்களில் உள்ள ஆணிகள், இரும்புத் துண்டுகள் ஆகியவற்றை அகற்றுவதால் பெரும்பாலான புகையிரதங்கள் தடம் புரள்கின்றன. இவ்வாறானவர்கள் தொடர்பில் அறியக் கிடைத்தால் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

2000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்

0
ஆசிரியர் பற்றாக்குறையால் 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான 2000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று...

ஜனாதிபதியை தலையிடுமாறு அவசர கடிதம்

0
மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் செயற்பாடுகள் தற்போது முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் தலையிடுமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் வைத்தியர்கள் இன்று...

அதிகளவு ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் மரணம்

0
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை நுகர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் ஐஸ் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த நிலையில், அவருக்கு...

‘அஸ்வெசும’வையும் அரசியலாக்க வேண்டாம் – அநீதியெனில் மேன்முறையீடு செய்யுமாறு ஜீவன் கோரிக்கை

0
அஸ்வெசும சமூக நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி இருந்தும் உத்தேச பெயர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால் அது தொடர்பில் எதிர்வரும் ஜுலை 10 ஆம் திகதிக்குள் மேன்முறையீடு செய்யுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு! வேட்டைக்கு சென்ற மூவர் கைது

0
துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வக்கரை வனப்பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவன் தனது உறவினர்கள் குழுவுடன் வேட்டையாடச் சென்ற போது அவர்கள் வைத்திருந்த...

இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஜுலையில் ஆரம்பிக்கிறது Air China

0
சீனாவின் 'Air China' (எயார் சைனா) விமான நிறுவனம் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஜூலை 03ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்க வரை 3...

” வங்கி விடுமுறை குறித்து வீண் அச்சம் வேண்டாம்”

0
மக்களின் வைப்புத் தொகையில் எவரும் கை வைக்க முடியாது என ஜனாதிபதியின் ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

மவுசாகலை நீர்த்தேக்க பகுதியில் சொகுசு ஹோட்டல் அமைக்கிறது அரேபிய கம்பனி – நீர்த்தேக்க தீவும் குத்தகைக்கு.

0
மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு அண்மித்ததாக அமைந்துள்ள காணித்துண்டொன்றையும், நீர்த் தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவொன்றையும் நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் ஐக்கிய அரபு இராஜ்ஜிய கம்பனியொன்றுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் கெப்பிட்டல்...

தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் பலி – நாவலப்பிட்டியவில் சோகம்

0
நாவலபிட்டிய, மொன்றிகிறிஸ்ரோ தோட்டத்தில் தொட்டிலில் கழுத்து இறுகி 9 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இத்துயர் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்த மற்றுமொரு சிறு குழந்தைக்காக சாரியில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் குறித்த சிறுவன்...

மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!

0
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். “ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...

பாடலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

0
சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்றுக்...

கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!

0
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...