நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு விக்கி ஆதரவு!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும்...
சுதந்திரக்கட்சி எடுத்துள்ள அதிரடி முடிவு!
அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபகச் கட்டாயம் பதவி...
மலையகத்தின் முதலாவது பெண் பேராசிரியர் !
கலாநிதி ராஜலட்சுமி சேனாதிராஜா அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் 22. 12. 2020 தினத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் முகாமைத்துவத்தில்(professor in management) பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
மலையக மக்களின் முதலாவது பெண் பேராசிரியர்...
21 ஆவது திருத்தத்தை அமைச்சரவை ஊடாகவே துரிதமாக முன்னெடுக்கலாம்
தனிநபர் பிரேரணையை விட அமைச்சரவை ஊடாக மேற்கொள்வதே 21 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கான துரிதமான வழியென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உடனடியாக மேற்கொள்ள வேண்டிய விடயம்...
‘கோ ஹோம் கோட்டா’ – ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி கண்டியில் ஆரம்பம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், இந்த அரசு வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள பாத யாத்திரை இன்று கண்டியில் ஆரம்பமாகின்றது.
'சுதந்திரத்துக்கான போராட்டம்' எனும்...
’03’ ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு – 04 ஆம் திகதி பலப்பரீட்சை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் சர்வக்கட்சி இடைக்கால அரசு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையில்...
அமைச்சு பதவியை பெற்றவர்களை விரட்ட சு.க. முடிவு
அரசுக்கு ஆதரவு வழங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் கட்சியில் இருந்து விரட்டுவதற்கு மத்திய செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அரசை ஆதரித்து - இராஜாங்க அமைச்சு பதவிகளைப் பெற்றுக்கொண்ட சுரேன் ராகவன், சாந்த...
’21’ ஐ கையாள அமைச்சரவை உப குழு நியமனம்!
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கத்தை வெளியிடவில்லை.
அத்துடன், 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வகையில் 21ஆவது திருத்தச்சட்டத்தை...
அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் சாத்தியம்?
இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு குறைப்பு எதிர்பார்க்கப் படுவதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய...
அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்த நிலையிலேயே கொழும்பு...