சஜித் அணியின் போராட்டம் குறித்து மஹிந்த வழங்கிய பதிலடி
“சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிரணியினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில்...
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் ஹோட்டல்களுக்கு பூட்டு! பலர் தொழில் இழப்பு!!
நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், ஹோட்டல்களும், சிறு அளவிலான உணவு விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுவருகின்றன. எதிர்காலத்திலும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் ஹோட்டல் தொழில் துறையில் உள்ள சுமார் 5 லட்சம்பேர்...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆதரவளிக்குமா?பேச்சுவார்த்தைக்கு தயார்
இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய - பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சென்யோங்-ரி கடந்த...
சர்வக்கட்சி மாநாட்டால் பயன் கிட்டுமா? அநுர விளக்கம்
" அரசியல் அழுத்தங்களை சமாளிப்பதற்காக நடத்தப்படும் சர்வக்கட்சி மாநாடுகளில் எவ்வித பயனும் இருக்காது. எனவே, உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இது விடயத்தில் ஜே.வி.பி. உறுதியான முடிவை எடுக்கும்." - என்று ஜே.வி.பியின்...
ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மட்டுமே-டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு
கொழும்பு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மட்டுமே வழங்க வேண்டும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
தற்போது...
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் எரிபொருள் விலையை குறைக்க முடியாது- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட நஷ்டம் காரணமாக எரிபொருள் விலையை...
மின்கட்டண அதிகரிப்பிற்கு முஸ்தீபு
மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே இது...
எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்புகிறதாம்!
எரிவாயு கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போதுமானளவு எரிவாயு இருப்பு இன்மையால், எரிவாயு விநியோகம் தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக லாஃப்...
இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!
- பாரத பிரதமருக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு -
இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளமையின் மூலம் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமைகளை ஓரளவு...
பசிலுக்கும் கப்ராலுக்கும் மோதலா? நடப்பது என்ன?
சமகால அரசாங்கத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மோசமான செயற்பாடுகள் காரணமாக அமைச்சர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பசிலின் கோபத்திற்கு உள்ளான அமைச்சரவை அமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இணைந்து சுயாதீனமாக செயற்படத் திட்டமிட்டுள்ளதாக...









