கொரோனா தொற்றிலிருந்து மேலும் 179 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 179 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561,128 ஆக அதிகரித்துள்ளது.
15 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை
நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட சகல இளைஞர், யுவதிகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிளொக் செயின் எனப்படும் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது.
இது இளைஞர்களின்...
லாப்ஸ் நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு
போதுமான அளவில் லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட சுமார் மூன்று வாரங்கள் ஆகும் என லாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச் வேகபிடிய தெரிவித்துள்ளார்.
முன்னர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 40,000 முதல் 50,000...
வருடத்தின் முதலாவது எரிக்கல் வீழ்ச்சி இன்று
வருடத்தின் முதலாவது எரிக்கல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு இன்று (03) நள்ளிரவு முதல் கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது.
மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என...
மாற்று அரசை உருவாக்கினால் 6 மாதங்களில் ஆட்சி கவிழும்!
“ மாற்று அரசொன்றை உருவாக்கினால்கூட தற்போதைய சூழ்நிலையில் அந்த அரசும் 6 மாதங்களுக்குள் கவிழ்ந்துவிடும். எனவே, மாற்று அரசு அல்ல, உறுதியான வேலைத்திட்டமே தற்போது வேண்டும்.” - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும்,...
மகனையும், மகளையும் மரத்தில் கட்டி கடுமையாக தாக்கிய தந்தை கைது – ஹட்டனில் பயங்கரம்
ஹட்டன், குடாகம சமகி மாவத்தை பிரதேசத்தில் இரு சிறார்களை துன்புறுத்தில் குற்றச்சாட்டின்கீழ் அச்சிறுவர்களின் தந்தை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் 6 வயதுடைய சிறுவனும், 7...
தமிழ் முற்போக்கு கூட்டணி ‘தடம் மாறுகிறதா?’ ‘தடுமாறுகிறதா?’
ஒரு மலையக மகனின் ஆதங்கம்
இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் எத்தனையோ அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசியல் கூட்டணிகள் தோன்றி இருந்தாலும் அதில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு...
விவசாயத்துறை அமைச்சராக சமல்?
விவசாயத்துறை அமைச்சுப் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை அமைச்சர் சமல் ராஜபக்ச ஏற்கமறுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அமைச்சரவை மறுசீரமைப்பின்போது , விவசாயத்துறை அமைச்சை தனது மூத்த சகோதரர்...
அரவிந்தகுமாருக்கு எதிராக போர் பிரகடனத்தை வெளியிட்டார் ராதா!
" நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் நுவரெலியாவுக்கு வந்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
விவசாயத்துறை அமைச்சர் ‘பெயில்’ – விளாசித்தள்ளும் இராஜாங்க அமைச்சர்
" விவசாயத்துறை அமைச்சர் தோல்வியடைந்துவிட்டார். எனவே, செய்யக்கூடிய உரிய நபர்களிடம் அமைச்சுப் பதவிகள் கையளிக்கப்பட வேண்டும்." - என்று இராஜாங்க அமைச்சர் சுனில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
" அந்நிய ஆக்கிரமிப்பின்போதுகூட, எமது நாட்டு விவசாயம்...











