கினிகத்தேனையில் இடிந்துவிழுந்த மூன்று மாடிக் கட்டடம்!
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை, மில்லகஹமுல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடி கட்டடமொன்று இன்று (06) அதிகாலை முற்றாக இடிந்து விழுந்துள்ளது.
கினிகத்தேனை பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை...
ரூ. 1,700 – அரசுமீதான நம்பிக்கை சிதைந்துவிட்டது!
இம்மாதம் பத்தாம் திகதி 1700 ரூபா என்ற அடிப்படையில் சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த தொழிலாளர்கள், ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் அவர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம்பள விடயத்தில் ஜனாதிபதி...
கதிர்காமம் ஆடிவேல் விழா கொடியேற்றம் இன்று
கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ விழா இன்று (06) கொடியேற்றத்துடன் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டள்ளது.
இந்த வருடாந்த மஹோற்சவ விழாவினை கண்டுகளிக்க நாட்டில் பல பாகங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் தரிசனத்துக்காக...
லயன் யுகத்துக்கு முடிவுகட்டுவேன்: சஜித் சபதம்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை லயன்களிலேயே முடக்காமல் அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் இன்று உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பெருந்தோட்டப் பகுதிகளில் வசித்து வரும்...
ரூ.1700 விடயத்தில் ஏமாற்றமே தொடர்கிறது!
சம்பள விடயத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
கெஹலிய குடும்பத்தினரின் வங்கிக்கணக்குகள் முடக்கம்!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியார் வங்கி கணக்குகள் சிலவற்றை 03 மாதங்களுக்கு முடக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(05) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...
பதுளையில் கோர விபத்து: நால்வர் பலி!
பதுளை, சொரணாதொட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர்.
லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் நடுவே கவிழ்ந்துள்ளது. லொறியில் பயணித்த அறுவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நால்வர் பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த மேலும்...
குளியல் காட்சியை படமெடுத்த பொலிஸ் கொஸ்தாபலுக்கு மறியல்
பெண் பொலிஸார் விடுதியின் குளியறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கொஸ்தாபலை , மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம்...
லிந்துலை தீ விபத்து: 05 குடும்பங்கள் பாதிப்பு (2ஆம் இணைப்பு)
தலவாக்கலை லிந்துலை பெயாவல் தோட்ட பெயாபீல்ட் பிரிவு தோட்டத்திலுள்ள ஐந்து குடியிருப்புக்கள் நேற்று (04) இரவு தீக்கிரையாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இத் தீ விபத்து காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 36...
சஜித்திடம் தஞ்சம் கோருகிறாரா வடிவேல் சுரேஷ்?
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீண்டும் கட்சிக்குள் வருவதற்கு முயற்சிக்கின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்...













