இலங்கையை கைவிடமாட்டோம் – ஐரோப்பிய நாடுகள் உறுதி!
" ஐரோப்பிய பிராந்திய நாடுகளை இலங்கையின் நண்பர்களாகக் கருதுங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையை கைவிடாது தொடர்ந்து ஆதரவளிப்போம்."
ஐரோப்பிய பிராந்திய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தனர்.
பொருளாதாரத்தை...
600 லீற்றர் பெற்றோலை பதுக்கியவர் அதிரடிப்படையால் கைது!
யாழ். மானிப்பாயில் 600 லீற்றல் பெற்றோலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றில் சட்டவிரோதமாக பெற்றோலை மறித்து வைத்திருந்த நிலையில் விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் 52 வயதுடைய நபர் ஒருவர்...
ஆஸி. அணிக்கு ஆறுதல் வெற்றி – தொடரை வென்றது இலங்கை!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. எனினும், 3-2 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
5 ஆவது ஒருநாள்...
நீங்கள் பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள்! – மனோ
காலிமுக திடல் போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம். ஆனால், போராட்டத்தை நாம் அங்கிருந்து கற்றோம் என நீங்கள் நினைக்க கூடாது. நீங்கள் பாற்சோறு உண்டு கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள். நாம் மதவாதத்தால், இனவாதத்தால்,...
தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம்
நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று மாலை பதவிப்பிரமாணம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
குழந்தை பிரசவித்த 13 வயது சிறுமி
கண்டி – ரங்கல, டக்வாரி தோட்டத்தில் 13 வயது சிறுமி குழந்தை பிரசவித்தமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாவது சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை...
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்த மூவர் கைது
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்திருந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மாகும்புர, மாத்தறை மற்றும் பூகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மாகும்புர பகுதியைச் சேர்ந்தவரிடமிருந்து 1,350 லீற்றர் டீசலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்....
விவசாய அமைச்சின் விசேட அறிவிப்பு
ஜூலை 6ஆம் திகதி தொடக்கம் விவசாய திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்படுவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
யூரியா உரத்தை வினைத்திறனான முறையில் நாடு...
இலங்கை மீண்டெழ வழியென்ன? சம்பந்தன் முன்வைத்துள்ள யோசனை!
இலங்கை பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமெனில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.
'தி ஹிந்து' நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திரத்திற்கு...
பதுளையில் பல வீடுகளில் கைவரிசை காட்டிய கணவனும், மனைவியும் கைது!
20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு பொருட்களுடன் கணவனும் மனைவியும் பதுளை பொலிஸாரால் நேற்று அதிகாலை (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
60 வயதுடைய கணவனும் அவரின் 57 வயதானமனைவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என...











