இலங்கைக்கான பயண கட்டுப்பாட்டில் தளர்வு
இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளில் பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்வுகளை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக ‘அத்தியாவசிய பயணங்களை மாத்திரம்’ மேற்கொள்ளுமாறு, இலங்கைக்கான பயண ஆலோசனையில் தமது பிரஜைகளை பிரான்ஸ் அரசாங்கம் கோரியிருந்தது.
தற்போது, அந்த பரிந்துரையை, இலங்கைக்கான பயணத்தில்...
225 எம்.பிக்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும் – ரோசி கோரிக்கை
" 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும்." - என கோரிக்கை விடுத்துள்ளார் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க.
" சர்வக்கட்சி அரசமைப்பதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டை...
‘கோட்டாவுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு வழங்கவும்’ – ஜனாதிபதியிடம் மொட்டு கட்சி கோரிக்கை
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஶ்ரீலங்கா...
‘கட்சி தாவல்’ – ரஞ்சித் மத்தும பண்டாரவின் அறிவிப்பு வெளியானது!
ஐக்கிய மக்கள் சக்தியைபிளவுபடுத்துவதற்கான சதி முயற்சி இடம்பெற்றுவருகின்றது - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ரஞ்சித் மத்தும பண்டார உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் 20 எம்.பிக்கள் அரசுடன் இணையவுள்ளனர் என சிங்கள நாளிதழொன்று...
முடிந்தால் 9,000 வாக்குகளை பெற்று காட்டவும்! விமல் தரப்புக்கு மொட்டு கட்சி சவால்!!
விமல் வீரவன்ச தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணி தமது கட்சிக்கு சவாலாக அமையாது - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில்...
சஜித் அணியை உடைப்பதே ரணிலின் இலக்கு – பதறுகிறார் ஹிருணிக்கா!
ஐக்கிய மக்கள் சக்தியை இரண்டாக பிளவுபடுத்துவதே ரணில் விக்கிரமசிங்கவின் இலக்காக இருக்கின்றது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஹிருணிக்கா...
வரிசை யுகத்துக்கு முடிவு கட்டிவிட்டோம் – மார் தட்டுகிறது மொட்டு கட்சி!
" வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம். மக்கள் தற்போது இயல்பு நிலையை நோக்கி நகர்கின்றனர்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
மொட்டு கட்சி...
22 இற்கு எதிராக 9 மனுக்கள் தாக்கல்!
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தில் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாகானந்த கொடித்துவக்கு, டொக்டர் குணதாச அமரசேகர...
வசந்த முதலிகே உட்பட ஐவர் கைது!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார்.
வசந்த முதலிகே உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வசந்தவின் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியில் பேரணியில் ஈடுபட்டு...
மேர்வின் சில்வா விடுதலை
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை எனவும், அடுத்த நீதிமன்றத் தினத்தில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால் போதும் எனவும் கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த...












