எரிபொருள் கோரி கண்டி – கொழும்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம்
கண்டி – கொழும்பு பிரதான வீதியில் எரிபொருள் கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்கம்பல பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
போராட்டம் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 வரை தேர்தல் இல்லை!
2024 ஆம் ஆண்டு வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமலிருக்க அரசு திட்டமிட்டுள்ளது என அறியமுடிகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த வருடம் முழுவதுமாக பொருளாதார...
O/L பரீட்சை நாளை ஆரம்பம்!
நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
குறித்த பரீட்சை 3 ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களிலும்,...
மாவத்தகம பகுதியில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
மாவத்தகம, பரகஹதெனிய பிரதேசத்தில் நேற்று (21) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நபர் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சிங்கதெனிய, பரகஹதெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியது...
அருந்திக்க பெர்ணான்டோ விமானியா? ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை
தேசிய விமான சேவையில் ஒரு விமானியாக தான் கடமையாற்றியதாக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ சமீபத்தில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் சங்கம் தெளிவுபடுத்தலை...
எரிபொருள் நிலைய உரிமையாளரின் வீட்டிற்கு தீ
கெக்கிராவ – இப்பலோகம – திலக்கபுர பகுதியில் உள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இப்பலோகம பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்தில், எரிபொருள் கிடைக்கவில்லை என்ற...
இன்று கொழும்பை வந்தடையும் தமிழக அரசின் நிவாரணப்பொருட்களை ஏற்றிய கப்பல்
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக சுமார் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான அத்தியாவசியப்பொருட்களுடன் கடந்த புதன்கிழமை இந்தியாவிலிருந்து புறப்பட்ட கப்பல் இன்றைய தினம் கொழும்பை வந்தடையவுள்ளது.
இலங்கை மக்களுக்கு உதவுவதற்கென இந்திய...
ஆஸி. பொதுத்தேர்தலில் தொழில்கட்சி வெற்றி! புதிய பிரதமருக்கு ஜனாதிபதி கோட்டா வாழ்த்து!!
ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அந்தோணி அல்பானீஸ்சுக்கு, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு, புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில்...
‘கோட்டா கோ ஹோம்’ – எச்.என்.டி. மாணவர்களின் பேரணி மீது தாக்குதல் கண்ணீர் புகை தாக்குதல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, உயர் தேசிய டிப்ளோமா (எச்.என்.டி.) மாணவர்களால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் நீர்த்தாரைத்...
சம்பிக்கவுக்காக அமைச்சு பதவியை தியாகம் செய்ய தயார் – அமைச்சர் காஞ்சன
" நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க விரும்பினால், மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சு பதவியை அவரிடம் ஒப்படைக்க நான் தயார்."
இவ்வாறு மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார் .
வலுசக்தி அமைச்சில்...











