‘பிரதமர் பதவி’யை ஏற்கும் அறிவிப்பை சஜித்தும் விடுத்தார்!
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், பிரதமர் பதவியை ஏற்பதற்கு சஜித் பிரேமதாச தயாராகவே இருக்கின்றார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவரான லக்ஷ்மன் கிரியல்ல இன்று அறிவித்தார்.
விசேட...
6 மாதங்களுக்கு ஆட்சியை பொறுப்பேற்க தயார் – அநுர அதிரடி அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், இடைக்கால அரசின் பொறுப்பை ஆறு மாதங்களுக்கு ஏற்பதற்கு தயார் என அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன்று அறிவித்துள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள...
எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய இராணுவம் களமிறக்கப்படுமா? தூதரகம் மறுப்பு
" இந்திய படைகள் இலங்கையில் களமிறக்கப்படலாம்." - என ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை இலங்கைக்கான இந்திய தூதரகம் நிராகரித்துள்ளது.
இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு...
‘படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டவிரோத உத்தரவு’ – சுமந்திரன் சுட்டிக்காட்டு
சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்கிற உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொது சொத்துக்கள் அல்லது...
கோட்டா இருக்கும்வரை இடைக்கால அரசுக்கு ஆதரவு இல்லை – அநுர திட்டவட்டம்
“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசமைப்பதால் பயன் ஏற்படாது. அவரால் நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது. எனவே , கோத்தாபய ராஜபக்சவும் பதவி விலகவேண்டும்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார...
வன்முறைகளால் ஏற்பட்ட பாதிப்புகள்! விவரம் அறிவிப்பு
“ நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றை பொருட்படுத்தாமல் - சட்டத்துக்கு கட்டுப்படாமல் வன்முறை முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலை நீடித்தால் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டிய நிலை பொலிஸ்...
நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்படாது! இன்று கட்சி தலைவர்கள் கூட்டம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (11) முற்பகல், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம், பாதுகாப்பு காரணங்களால் இரத்து செய்யப்பட்டிருந்தாலும், zoom தொழில்நுட்பம் ஊடாக...
பிரபாகரனை போற்றி, ராஜபக்சவை தூற்றிய வைரமுத்து
" நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
'தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே...
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே..."
இவ்வாறு கவி நடையிலேயே கேள்வி தொடுத்து, மஹிந்த ராஜபக்சவை விமர்சித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு?
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டபடி மே...







