‘பூஸ்டர்’ குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்!
ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான தலைமுறையொன்றை உருவாக்குவதற்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிகவும் முக்கியமானதாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக...
‘தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்துக்கு இ.தொ.காவுக்கும் அழைப்பு’
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கும் ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் பேசும் கட்சிகளுக்கும் எதிர்காலத்தில் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ் பேசும் மக்களின் அரசியல்...
முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை!
முகக்கவசம் அணியாமல் வீதியில் நடமாடுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாநகர எல்லையில் முகக்கவசம் இன்றி நடமாடுபவர்கள் 'என்டிஜன்ட்' பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
சீன நிறுவனத்துக்கு கொடுப்பனவை வழங்க அமைச்சரவை ஒப்புதல்
சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதன்போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நீதி...
IMF விவகாரத்தில் மதில்மேல் பூனையாக இலங்கை – அமைச்சரவைக் கூட்டத்திலும் முடிவு இல்லை
நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடும் விவகாரத்தில் இலங்கை அரசு ‘மதில் மேல் பூனை’ நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.
தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்த வழியென அரசிலுள்ள...
நாட்டாமை தொழிலாளர்களின் தள்ளுவண்டிகளால் புறக்கோட்டையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!
கொழும்பு நகரில் விசேடமாக புறக்கோட்டை மற்றும் குறுக்கு வீதிகளில் நாட்டாமை தொழிலாளர்களின் வண்டிகள் (தள்ளு வண்டிகள்) ஒழுங்கின்றி பயணம் செய்வதன் காரணமாக புறக்கோட்டை பிரதேசத்தில் நடந்து செல்லும் மக்கள் மற்றும் முச்சக்கரவண்டி, லொறி,...
ஜனாதிபதி செயலர் பதவியிலும் விரைவில் மாற்றம்?
ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து பிபீ ஜயசுந்தரவை நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பதற்கு அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
அமைச்சர்களான சமல் ராஜபக்ச, பந்துல குணவர்தன உட்பட மேலும் சில அமைச்சர்களும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுமே...
‘இலங்கையர் படுகொலை’ – பாகிஸ்தானில் இதுவரை 249 பேர் கைது!
பாகிஸ்தானில் வைத்து இலங்கையரான பிரியந்த குமார கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 249 பேர் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில்...
நாட்டில் மேலும் 552 பேருக்கு கொவிட்
நாட்டில் மேலும் 552 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 573,454 ஆக அதிகரித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் அம்பியூலன்ஸ் வண்டிகளிடம் கட்டணம் அறவிடப்படமாட்டாது
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல அம்பியூலன்ஸ் வண்டிகளிடம் கட்டணம் அறவிடப்படமாட்டாது என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் சகல அம்பியூலன்ஸ் வண்டிகளிடம்...











