இன்று இதுவரையில் 626 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!
நாட்டில் மேலும் 168 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 458 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானது.
அதற்கமைய, இன்று இதுவரையில் 626 புதிய தொற்றாளர்கள் அடையாளம்...
பெருந்தொகை கஞ்சா, பணத்துடன் 8 பேர் கைது
கெசல்வத்தையில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 75.5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ரூ. 790,000 ரூபாய் பணம் ஆகியவற்றுடன், எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
75.5 கிலோகிராம்...
பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக புதிய திட்டம் அறிமுகம்
கொரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் இழந்த கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் பெற்றுக்கெர்டுப்பதற்காக புதிய திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக தேசிய கற்கை நிறுவனத்தின் பணிப்பாளா் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தாா்.
அந்த திட்டத்துக்கமைய அத்தியாவசிய பகுதிகள் தொடர்பில்...
’உற்பத்தி கூடினாலேயே பொருள் விலை குறையும்’
உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரித்தால் மட்டுமே பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொரோனா பேரழிவை அடுத்து இலங்கை உட்பட உலகின் அனைத்து நாடுகளும் பொருளாதார மந்தநிலையால்...
நல்லை ஆதீனத்தை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!
கந்த சஷ்டி தினத்தன்று யாழ்ப்பாணத்தில் உள்ள திருஞானசம்மந்தர் மடத்தில் நல்லை ஆதீனத்தை இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் சந்தித்து ஆசிப்பெற்றார்.
இச்சந்திப்பின் போது ஜனாதிபதி ஆணைக்குழுவினால்...
கொவிட் தொற்றால் மேலும் 15 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 15 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(06) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால்...
நாட்டில் மேலும் 458 பேருக்கு கொரோனா
நாட்டில் மேலும் 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை...
சீமெந்து விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
டோக்யோ சுபர் மற்றும் நிப்பொன் சீமெந்து ஆகிய சீமெந்து வகைகளின் 50 கிலோ எடையுடைய மூடையின் அதிகபட்ச சில்லறை விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டோக்யோ சிமென்ட் (கம்பனி) லங்கா பி.எல்.சி. நிறுவனம்...
பி.சி.ஆர் சோதனைக்கு பயன்படுத்தப்படும் சாதன கொள்வனவில் 125 மில்லியன் ரூபா மோசடி
பி.சி.ஆர் இயந்திரத்தில் சோதனை நடாத்துவதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்களை கொள்வனவு செய்வதில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சாதனங்களை கொள்வனவு செய்வதில் சுமார் 125 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம்...
மோட்டாா் வாகனம் பதிவு செய்யும் திணைக்கள அதிகாரியொருவர் கைது
மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரியொருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.
3 மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்தமை மற்றும் ஆவணங்களை அச்சிட்டமை போன்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.







