மலையக எழுச்சி பயணம் ஆரம்பம்
மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவின் நினைவுத்தூபி தலைமன்னாரில் நிறுவப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும்...
பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை இணையத்தளத்தினூடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச...
சர்வதேசத்திடம் நீதி கோரி முல்லைத்தீவில் பேரணி
“சர்வதேசமே எமக்காகக் குரல் கொடு” என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் இந்தப் பேரணியை முன்னெடுத்தது.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்...
போதகர் ஜெரோமின் வங்கி கணக்குகளில் 12 பில்லியன் பணம்
பிற மதங்கள் தொடர்பில் சர்ர்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் 11 வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் மொத்தம் 12.2 பில்லியன் உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் இன்று (28) தெரிவிக்கப்பட்டது.
இதனைத் சட்டமா அதிபர்...
வசந்த முதலிகேவுக்கு பிணை
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் வசந்த முதலிகே நேற்று (27) கறுவாத்தோட்ட...
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஐவர் கைது!
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் மோட்டார் மற்றும் கையடக்க...
இலங்கையர் உட்பட 05 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய குவைத் அரசாங்கம்
குவைத் அரசாங்கம் 05 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இந்தக் குழுவில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஷியா மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய...
100 வது தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி
ஜேர்மனியை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் 100வது தடவையாக இலங்கை வந்துள்ளார்.
ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயதுடையவரே இவ்வாறு இலங்கை வந்துள்ளார்.
அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில்...
உலகின் உயரமான பங்கீ ஜம்பிங் விளையாட்டு இலங்கையில்
தென்னாசியாவின் உயர்ந்த கோபுரமாகத் திகழும் தலைநகரில் உள்ள தாமரைக் கோபுரத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பங்கீ ஜம்பிங் (BUNGEE JUMPING) ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முகாமைத்துவ தலைவர் பிரசாந்த் சமரசிங்க கருத்து...
கடற்கரையில் இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் மீட்பு
களுத்துறை வடக்கு கடற்கரையில் இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
எனினும், குறித்த குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் குழந்தை காணாமல் போனமை தொடர்பில், இதுவரை பொலிஸாருக்கு...





