திடீர் சுகயீனம் – கொட்டகலை வைத்தியசாலையில் 42 மாணவர்கள் அனுமதி!
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 42 பேர், திடீர் சுகயீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் இன்று (11.10.2022) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரம் 6 முதல்...
சிறந்த இளம் தலைவரை உருவாக்குவோம் – சந்திரிக்கா சபதம்
மோசடிகள், கொள்ளை மற்றும் வன்முறைகளில் ஈடுபடாத நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற இளைய தலைவர் ஒருவரை உருவாக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய இளைய தலைவர் ஒருவரை உருவாக்கப்போவதாகவும்...
காணாமல்போனோரின் குடும்பத்தாருக்கான நிதி உதவி அதிகரிப்பு
காணாமல்போனவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படுகின்ற ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை 2 லட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே...
சிறைக்குள்ளும் வேலையைக்காட்டிய திலினி- வெளியான திடுக்கிடும் தகவல்
பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசி குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
விளக்கமறியலில் உள்ள பெண் கைதி ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபா தருவதாக கூறியே...
சூனியம் செய்ய சென்ற பெண்ணை நிர்வாணமாக்கி படமெடுத்த ஆசாமி கைது!
பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் , தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்தி செயற்பட்டுவந்த நபரொருவரை கொஸ்கம பொலிஸார் களுஅக்கல, வக பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
தனது மாந்திரீகம் எப்போதும் பிழைக்காது என்று...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொள்ளைச் சம்பவங்களும் தலைவிரிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டின்...
கவிதாயினி எஸ்தரின் ‘பெருவெடிப்பு மலைகள்’ நூல் அறிமுகவிழா 15 இல்
மலையகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய கவிதாயினிகளில் ஒருவரான எஸ்தர் நதனியலின் பெருவெடிப்பு மலைகள் எனும் கவிதை நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பிற்பகல்...
உக்ரைன்மீது ரஷ்யா கொலைவெறித் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் மீது நேற்று (10) பரபரப்பான காலை நேரத்தில் ரஷ்யா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு இதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
ரஷ்யாவை...
ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் கைது!
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போதை ஊசி மருந்துகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் அரசடி...
‘காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறை’ -ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்...













