காலிமுகத்திடல் சம்பவம்- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
காலிமுகத்திடல் சம்பவத்துடன் தொடர்புடைய ஆயிரத்து 500 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 677 பேர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .
குரங்கு அம்மை நோய் தொடர்பான பரிசோதனைகளை நடத்தவுள்ள ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
உலகின் பல நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள மற்றும் நோய்த் தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை...
எரிபொருள் கோரி கண்டி – கொழும்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம்
கண்டி – கொழும்பு பிரதான வீதியில் எரிபொருள் கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்கம்பல பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
போராட்டம் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 வரை தேர்தல் இல்லை!
2024 ஆம் ஆண்டு வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமலிருக்க அரசு திட்டமிட்டுள்ளது என அறியமுடிகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த வருடம் முழுவதுமாக பொருளாதார...
O/L பரீட்சை நாளை ஆரம்பம்!
நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
குறித்த பரீட்சை 3 ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களிலும்,...
மாவத்தகம பகுதியில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
மாவத்தகம, பரகஹதெனிய பிரதேசத்தில் நேற்று (21) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நபர் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சிங்கதெனிய, பரகஹதெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியது...
அருந்திக்க பெர்ணான்டோ விமானியா? ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை
தேசிய விமான சேவையில் ஒரு விமானியாக தான் கடமையாற்றியதாக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ சமீபத்தில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் சங்கம் தெளிவுபடுத்தலை...
எரிபொருள் நிலைய உரிமையாளரின் வீட்டிற்கு தீ
கெக்கிராவ – இப்பலோகம – திலக்கபுர பகுதியில் உள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இப்பலோகம பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்தில், எரிபொருள் கிடைக்கவில்லை என்ற...
கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீர் – நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரை
வடகொரியாவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 2.19 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போதிய கொரோனா பரிசோதனை வசதிகள் இல்லாததால், அந்த நோயைப் போன்ற ‘காய்ச்சலால்’ பாதிக்கப்பட்டவா்கள் என்று மட்டுமே அதிகாரிகள் புள்ளிவிவரங்களை...
இன்று கொழும்பை வந்தடையும் தமிழக அரசின் நிவாரணப்பொருட்களை ஏற்றிய கப்பல்
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக சுமார் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான அத்தியாவசியப்பொருட்களுடன் கடந்த புதன்கிழமை இந்தியாவிலிருந்து புறப்பட்ட கப்பல் இன்றைய தினம் கொழும்பை வந்தடையவுள்ளது.
இலங்கை மக்களுக்கு உதவுவதற்கென இந்திய...