காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு!
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் வேளையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தனது உறவினர்களுடன் நீராடசென்றிருந்த வேளையிலேயே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்.
காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த டயஸ் பெர்ணான்டோ கிளின்டன் எனும்...
தோட்டத் தொழிலாளர்களுக்கான EPF, ETF கொடுப்பனவுகளை செலுத்த அமைச்சரவைப் பத்திரம்!
அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு செலுத்தப்படாதுள்ள ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனதா பெருந்தோட்ட...
” புறக்கோட்டையில் அனுமதியற்ற கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் கடத்தல்காரர்கள்”
கொழும்பு புறக்கோட்டையில் அனுமதியற்ற விதத்தில் கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்கள் குழுவொன்று இருப்பதாக கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை வெளிப்படுத்தியுள்ளது.
கொழும்பு மிதக்கும் சந்தைக்கு முன்பாக இடிக்கப்பட்டுள்ள 21...
கறுப்பு சட்டையுடன் நாளை களமிறங்குங்கள்: வேலுகுமாருக்கு இதொகா அழைப்பு!
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு சகல தொழிற்சங்கங்களுக்கும் இருக்கிறது. அதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும் என கருதுபவர்கள் தமது விதண்டாவாத கருத்துக்களை ஒதுக்கி...
இழுபறியில் சம்பளம்: தொடரும் நாடகம் – தீர்வு எப்போது?
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும்...
காலக்கெடு முடிந்துவிட்டது 1,700 ரூபா எங்கே? நாடகமாடாமல் சொன்னதை செய்யுங்கள்…
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் ஆயிரத்து 700 ரூபா கிடைக்கும் என்றார்கள். ஆனால் இன்னும் சம்பள உயர்வு கிடைக்கப்பெறவில்லை. எனவே, நாடகமாடாமல் ஆயிரத்து 700 ரூபாவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.”
இவ்வாறு...
இடுகாட்டை ஆக்கிரமிக்க இடமளியோம்: மயான பூமியில் திரண்டு ஹரிங்டன் தோட்ட மக்கள் போராட்டம்
திம்புல - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் தோட்ட மக்கள், மயானத்தில் குவிந்து இன்று (17) காலை கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொட்டக்கலை நகரில் இருந்து சுமார் 1/2 கிலோமீட்டர் தூரத்திலேயே...
நுவரெலியாவில் தேர்தல் ஆணையரின் விடுதி உடைக்கப்பட்டு கொள்ளை!
நுவரெலியா மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் எவரும் இல்லாதவேளை தங்க நகை , பணம் , இலத்திரனியல் சாதனங்கள் என பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா...
24 ஆம் திகதி தீர்வு இல்லையேல் பதவி துறப்பேன் – வடிவேல் சுரேஷ் அறிவிப்பு
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி சாதகமான பதில் கிட்டாவிட்டால் பதவி துறப்பேன்.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதியின்...
பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வீட்டில் வைத்தே மின்சாரம் தாக்கியுள்ளது எனவும், நாகோட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் எனவும்...













