இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் இடைநிறுத்தம்
நுவரெலியா - இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இருவரின் சடலங்கள் மீட்கப்படவில்லை.
இன்று 13.04.2022 இரண்டாவது நாளாகவும் கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும்...
கேம்பிரியில் தங்க நகைகள் கொள்ளை! அச்சத்தில் மக்கள்!!
(ஆர்கே.கவிஷான்)
லிந்துலை, கேம்பிரி மேற்பிரிவில் இன்று (2022.04.13) கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வீட்டார் உறக்கத்தில் இருந்த சமயம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அதிகாலை 02.50 மணியளவில் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான நகைகள் மற்றும் பணப்பைகளை...
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் அரச ஊழியர்கள் போராட்டம்
அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உணவு ஓய்வு நேர வேளையில் அட்டன் பிரதேசத்தில் உள்ள அரச ஊழியர்கள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்...
அஞ்சிவிட்டது அரசு – தலவாக்கலையில் நாளை போராட்டம் இல்லை – 10 ஆம் திகதி அணிதிரள்வோம்!
" மக்கள் எழுச்சிக்கு அஞ்சி அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலையில் நாளை (03) நடைபெறவிருந்த போராட்டம் பிற்போடப்படுகின்றது. எனினும், எதிர்வரும் 10 ஆம் திகதி குறித்த...
‘அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும்’ – அறிவிப்பு விடுத்தார் ஜீவன்
" அமைச்சு பதவிகள் அல்ல, மக்களின் தீர்மானமே காங்கிரசுக்கு முக்கியம். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாவிட்டால் அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும் ” - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க...
மக்கள் திண்டாடும்போது வசந்தகால கொண்டாட்டம் எதற்கு? நுவரெலியாவிலும் வெடித்தது போராட்டம்!
நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இன்று (01.04.2022) வழமைபோல காலை 8.30 மணியளவில் நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைக்கு முன்பாக ஆரம்பமானது.
நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால்...
பொகவந்தலாவையில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – இருவர் காயம் – மாணவர்கள் தப்பினர்
ஹட்டன், பலாங்கொடை பிரதான வீதியின் பொகவந்தலாவை கெம்பியன் பகுதியில் சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை பகுதியிலிருந்த வந்த லொறி பாதையை...
வரிசையில் காத்திருந்த மக்களை ‘நாயே’ என திட்டி ‘கேஸ்’ முதலாளி – கொட்டகலையில் பதற்றம்
சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த மக்களை, 'நாயே' என விளித்து - திட்டி, வர்த்தக நிலைய உரிமையாளர் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட சம்பவமொன்று இன்று (31.03.2022) கொட்டகலை நகரில்...
தீ விபத்து – இரு லயன் வீடுகள் தீக்கிரை (படங்கள்)
நமுகுகல, கனவரல்ல CVE பிரிவில் பதினொரு வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. பொருட்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.
இத்தீ விபத்தில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை....
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா – அரவிந்தகுமார் உறுதி
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிலைப்படுத்தி, குறைந்த வருமானங்களை பெறும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பத்தாயிரம் ரூபா என்ற அடிப்படையில், மொத்தமாகவோ அல்லது இரு முறைகளாகவோ வழங்கப்படுமென, நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச உறுதியளித்ததாக...













