Home Blog Page 3525

கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்தை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இன்று (21) நண்பகல் 12 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து இரண்டுவருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட பூஜைகள் நடைபெறுகின்றன.

இதனை முன்னிட்டு இன்று விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்படுவதால் இந்த விசேட போக்குவரத்துத திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக வாகனங்கள் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புனித அந்தோனியார் மாவத்தை – ஜிந்துப்பிட்டி சுற்றுவட்டம் முதல் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் நோக்கி வாகனங்கள் உட்செல்ல மற்றும் வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இராமநாதன் மாவத்தை – ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை நோக்கி வாகனங்களை செலுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கிறிஸ்டி பெரேரா மாவத்தை – ஜம்பட்டாவீதி பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்து கொச்சிக்கடை தேவாலயம் நோக்கி பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வாகன சாரதிகள் மாற்று வீதிகளின் ஊடாக தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து புறக்கோட்டை வரை பயணிக்கும் வாகனங்கள் ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை, கிறிஸ்டி பெரேரா மாவத்தை, சங்கமித்தா மகா வித்தியாலய மாவத்தை ஊடாக புறக்கோட்டை நோக்கி பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புறக்கோட்டையிலிருந்து ஹெட்டியாவத்தை நோக்கி செல்லும் வாகனங்கள், ரெக்லமேஷன் வீதி, சைனா தெரு, ஐந்துலாம்பு சந்தி சுற்றுவட்டம், ஆட்டுப்பட்டித் தெரு, மகா வித்தியாலய மாவத்தை, ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை ஊடாக ஹெட்டியாவத்தை நோக்கி பயணிக்க முடியுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் இன்று (21) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்ப்பு – பிரஜா சக்தி பணிப்பாளர் பாரத்தின் புதிய முயற்சி

சுய தொழில் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாய்பை ஏற்படுத்தும் நோக்கில் புதிய திட்டமொன்றை பிரஜா சக்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள் சாமி உருவாக்கியுள்ளார்.

உள்நட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் இம்முறை இந்தத் திட்டத்தை பாரத் அருள்சாமி வடிவமைத்துள்ளார்.

இதன்முதற்கட்டமாக நுவரெலியா பருவகால கொள்வனவு தொகுதியில் பிரஜா ஷொப்பிங் விற்பனை கூடமொன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்த விற்பனைக் கூடத்தில் சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் உற்பத்திகள் விறப்னைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிரஜா சக்தி செயல்திட்டத்தின் மூலம் சுயதொழிலில் ஈடுபடுவதற்கு வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர்.

எனினும், இவர்களுக்கான சந்தை வாய்ப்பைப் பெறுவதில் பெரும் சிரமங்கள் இருப்பதால் சுயதொழிலில் ஈடுபடுவோர் தொடர்ந்தும் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்குத் தீர்வாக பிரஜா சக்தியின் செயல்திட்டப் பணிப்பாளர் பாரத அருள்சாமி புதிய சந்தைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான திட்டமொன்றையும் வகுத்துள்ளார்.

சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு நேரடியாக சந்தைவாய்ப்பை ஏற்படுத்தி, நுகர்வோருக்கு அதனை குறைந்தவிலையில் பெற்றுக்கொள்வதற்கான வழிகளிலும் இதன்மூலம் வகுக்கப்பட்டுள்ளது.

நம்வர் உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள பிரஜா சக்தி திட்டப் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, மக்கள் நம்நாட்டு உற்பத்திகளை பயன்படுத்தி, நம்மவர்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், நுவரெலியா பருவகால நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருவோர் எம்மவர் விற்பனை கூடத்திற்கு வந்துசெல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விற்பனைக் கூடத்தை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று திறந்துவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சபை வளாகத்தில் சாணக்கியன்மீது சீறிப்பாய்ந்த ராதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை ” நீங்கள் ஒரு ஏமாற்று அரசியல்வாதி.”  – என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு கடந்த 17 ஆம் திகதி நுவரெலியாவில் நடைபெற்றது.இம்மாநாட்டில் சிறப்பு அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோவும், சாணக்கியனும் பங்கேற்பார்கள் என ம.ம.மு. அறிவித்திருந்தது.

எனினும், இருவருமே நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இன்று பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது. இதன்போது சபை வளாகத்தில் வைத்து இராதாகிருஷ்ணனை சந்திப்பதற்கு சாணக்கியன் சென்றுள்ளார் எனவும், இதன்போது ஏமாற்று அரசியல் வாதிகளுடன் தான் கதைப்பதில்லை எனக்கூறி ராதாகிருஷ்ணன் சீற்றத்துடன் சென்றார் எனவும் ம.ம.மு. வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

தகவல. – நீலமேகம் பிரசாந்த்

பருத்தித்துறையில் வாள்வெட்டு – ஒருவர் பலி! நால்வர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்வாய் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இரண்டு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட முறுகலே வாள்வெட்டில் முடிந்ததாக தெரியவருகிறது.

படுகாயம் அடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விஜயதாச ராஜபக்சவின் மகன் கைது!

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஷ ராஜபக்சவின் மகன் ரகித்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கடை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாரம் கோப் மற்றும் கோபா குழுக்களின் முன்னிலையில் நான்கு நிறுவனங்கள் அழைப்பு

இந்த வாரம் அரச பொறுப்பு முயற்சிகள் குழு (கோப் குழு) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) முன்னிலையில் நான்கு நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் எதிர்வரும் 22ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருப்பதுடன், 23ஆம் திகதி தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் அழைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், முத்துராஜவல சதுப்பு நிலம் தொடர்பில் ஆராய்வதற்காக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் நாளை 21ஆம் திகதி அரசாங்க கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துனர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வரிகள் மற்றும் தண்டப் பணங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இறைவரித் திணைக்களம் 23ஆம் திகதி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளது.

மே தின நிகழ்வுகளை தனியாக நடத்த சுதந்திரக்கட்சி தீர்மானம்!

மே தின நிகழ்வுகளை தனியாக நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

” பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் மே தின பேரணியில் பங்குகொள்ளுவதற்கு அழைக்கப்படுவார்கள். அதற்கான அழைப்பு அட்டைகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்விலும் சு.கவின் பிரதிநிதி பங்கேற்பார்.” – என்றார் தயாசிறி.

அரசின் யோசனைக்கு இ.தொ.கா. எதிர்ப்பு – சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சு நடத்த திட்டம்

” தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து சிறுபான்மை கட்சிகளிடமும் ஆலோசனைகள் பெறப்படும். அதன்பின்னர் எமது திட்டம் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று (20.04.2021) தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நேற்று (19) அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் அரசாங்கத்தால் இரு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

மேற்படி யோசனைகள் சிறுகட்சிகளுக்கு பாதகமாக அமையும் என்பதால் அவற்றை இ.தொ.கா. நிராகரித்திருந்தது. இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கூறினார்.

” சிறுபான்மையின மக்களுக்கு எதிராக திட்டம் முன்வைக்கப்படவில்லை. அரசாங்கத்தின் தரப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டு அவை குறித்து எமது அபிப்ராயம் கோரப்பட்டது.

அதன்போது திட்டங்களை ஏற்கமுடியாது என நாம் குறிப்பிட்டோம். இதனையடுத்து எமது திட்டத்தை முன்வைக்குமாறு கோரினர். எனவே, இன்னும் ஒரிரு நாட்களில் அனைத்து சிறுபான்மையின் கட்சிகளையும் தொடர்புகொண்டு, நியாயமான திட்டத்தை முன்வைப்போம். ” – என்றார்.

க.கிசாந்தன்

‘மலையக மக்களுக்கான உரிமைகளை இழப்பதற்கு தயாரில்லை’ – செந்தில் தொண்டமான் திட்டவட்டம்

தேர்தல் சட்ட மறுசீரமைப்புகளின் போது மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தை கடுகளவேனும் குறைத்துக்கொள்ள தயாராகவில்லை என்பதுடன், சமரசங்களின்றி எமது உரிமைகளையும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் வென்றெடுப்பதற்காக களப்பணியாற்றுவோமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,

மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலம் முதல் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலம் வரை ஆளும் அரசாங்கங்களின் இருந்த போதும் சமரமின்றி இ.தொ.கா. குரல்கொடுத்துள்ளது. பல்வேறு அர்ப்பணிப்புகளுக்கு மத்தியிலும் போராட்டங்களுக்கு மத்தியிலும் வென்றெடுக்கப்பட்டுள்ள எமது அரசியல் உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின் ஊடாக இழப்பதற்கு நாம் தயாரில்லை.

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தில் நான் உட்பட ஜீவன் தொண்டமான் ஆகியோர் கட்சி சார்பாக கூட்டத்தில் கலந்துக் கொண்டோம். இக்கூட்டத்தில் புதிய மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்ட முறைமை தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இத்திருத்தச்சட்டத்தின் ஊடாக வெறும் 5 மாகாண சபை உறுப்பினர்களை மாத்திரமே மலையக மக்களால் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்கும்.

கடந்த காலங்களில் கேகாலை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கொழும்பு, பதுளையென பல்வேறு இடங்களில் இ.தொ.காவின் தேர்தல் பொறுப்பாளராக அமரர் ஆறுமுகன் தொண்டமானால் நியமிக்கப்பட்டிருந்தேன். இந்த சந்தர்ப்பங்களில் இ.தொ.கா பல மாகாண சபைளில் உறுப்பினர்களை வென்றெடுத்தது. அதனால் நேரடியாக அனைத்து மாவட்டங்களில் களப்பணியாற்றிய அனுபவம் மற்றும் புவியில் ரீதியான தரவுகளின் அடிப்படையில் புதிய தேர்தல் சட்டத்தின் ஊடாக 5 மாகாண சபை உறுப்பினர்கள் மாத்திரமே முழு மலையக மக்களுக்கு கிடைக்கப்பெறுமென பிரதமர் உட்பட ஆளுங்கட்சி தலைவர்களுக்கு எடுத்துரைத்ததுடன், 5 மாகாண சபை உறுப்பினர்கள் என்றால் முழு மலையகத்திற்கும் வெறும் 2 பாராளுமன்ற பிரதிநிதித்துவம்தான் வெற்றிக்கொள்ள கூடிய சூழ்நிலை அமையும். என்பதையும் ஆணித்தரமான சுட்டிக்காட்டினேன்.

இந்த வரலாற்று தவறு இடம்பெறுவதற்கு ஒருபோதும் நாம் அனுமயளிக்க மாட்டோம். எமது இன்றைய தலைமுறையை போன்று நாளைய தலைமுறையின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நிற்கிறோம். அதனால் 25 தனித் தமிழ் மாகாணசபை உறுப்பினர்களை வென்றெடுக்கும் தொகுதிகள் நுவரெலியா, பதுளை உட்பட மலையக மக்கள் பரந்துவாழும் மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட வேண்டுமென தெளிவாக ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு நான் விளக்கப்படுத்தினேன்.

25 மாகாண சபை உறுப்பினர்கள் இருந்தால் மாத்திரமே 11 அல்லது 12 பாராளுமன்ற உறுப்பினர்களை மலையக மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தில் எந்த அடிப்படையிலும் சமரசம் செய்துக்கொள்ள தயாரில்லை. புதிய தேர்தல் சட்டத்தில் மலையக மக்களின் உரிமைகளை வெற்றிக்கொள்ள உறுதியாக ஆளும் அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு போராடுவோம் என்பதுடன், நாம் முன்வைத்துள்ளது கோரிக்கை நியாயமானதென அரசாங்கம் ஏற்றுக்கொண்டு உரிய மறுசீரமைப்புகளை முன்மொழிவதாகவும் உறுதியளித்துள்ளது என்றார்.

விவேக் நடிப்பில் வெளியாக இருக்கும் 3 படங்கள்

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டு வந்த மறைந்த நடிகர் விவேக் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் மறைந்த விவேக் நடிப்பில் கடைசியாக தாராள பிரபு என்ற திரைப்படம் வெளியானது. ஹரிஷ் கல்யாண் உடன் டாக்டர் கண்ணதாசன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் விவேக். இக்கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது நடிகர் விவேக் இவ்வுலகை விட்டு விடைபெற்றிருக்கும் நிலையில் அவர் நடிப்பில் அடுத்ததாக 3 படங்கள் திரைக்கு வர உள்ளன.

நடிகர் விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக விவேக் இணைந்து நடித்துள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் அவருடன் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விவேக். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் விவேக் நடித்து வந்தார். அவரது காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதேவேளையில் பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...