Home Blog Page 3526

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர் – நாசா வரலாற்று சாதனை

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது.

கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் ரேவர் சேகரித்து வருகிறது. பெர்சவரன்ஸ் ரேவருடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

இன்ஜெனியூனிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. இந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டரை கடந்த 11 ஆம் திகதி  செவ்வாய் கிரகத்தில் பறக்கவிட நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் மென்பொருள் தொடர்பான பிரச்சினையால், திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது செவ்வாய்க்கிரகத்தில், ‘இன்ஜெனியூனிட்டி’ ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது. இதன்மூலம் பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கம்பளை பொலிஸ் விடுதிமீது முறிந்து விழுந்தது பலாமரம்!

கம்பளை, பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கும் விடுதிமீது இன்று அதிகாலை பாரிய பலா மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் பொலிஸ் விடுதியின் கூரை கடுமையாக சேதமடைந்துள்ளது. அத்துடன், பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், தெய்வாதீனமாக எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

விடுதியில் தங்கியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கம்பளை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலேயே விடுதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பளை நிருபர் – லாவண்யா

‘அரசியல் பழிவாங்கல்’ அறிக்கைமீது சபையில் இரு நாட்கள் விவாதம்

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைமீது எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை எதிரணி கொண்டுவரவுள்ளது.

அதேவேளை, குறித்த அறிக்கையானது அரசியல் மயப்படுத்தப்பட்டதொன்றாகும் என எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன. இக்குழுவில் உள்ள பரிந்துரைகள் அமுலாவதை தடுப்பதற்கு ஜே.வி.பி. நீதிமன்றத்தை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி மே 1 முதல் ஆரம்பம்

கொரோனா தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இரண்டாம் கட்ட தடுப்பூசி செயற்றிட்டத்தில் முதலாவதாக சுகாதார தரப்பினருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்கள் தொடர்பிலான ஆலோசனைக்குழு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் நேற்று (19) கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

சுகாதார அமைச்சிடம் தற்போது சுமார் மூன்றரை இலட்சம் அஸ்ட்ரா செனெக்கா கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் சுதத் சமரவீர இதன்போது தெரிவித்தார்.

துறைமுக நகரம் கொழும்பு மாவட்டத்துடன் இணைப்பு

துறைமுக நகரமானது கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஓர் அங்கமாகவே இருக்கும். உள்நாட்டு சட்டமே அங்கும் நடைமுறையில் இருக்கும் – என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” துறைமுக நகரில் எமது நாட்டிலுள்ள சட்டமே நடைமுறையில் இருக்கும். கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஓர் அங்கமாகவே அப்பகுதி இருக்கும். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியானது இலங்கைக்குரிய பூமிப்பகுதியாகவே இருக்கும். எனவே, நாட்டின் சட்டக்கட்டமைப்பை மீறும் வகையில் எவ்வித நடவடிக்கையும் இடம்பெறவில்லை. வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்காகதுவே குத்தகைக்கு வழங்கப்படுகின்றது.” – என்றார்.

உயிரை கையில் பித்துகொண்டு ஆற்றைக் கடக்கும் கர்கஸ்வோல்ட் தோட்ட மக்கள்

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பொகவந்தலாவ, டின்சின் கர்கஸ்வோல்ட் நடுக்கணக்குப்பகுதியில் வாழும் 100 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 இற்கும் மேற்பட்டவர்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாலத்தினை கடப்பதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த தோட்டத்தில் வாழும் பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பல வருடகாலமாக குறித்த குறுக்கு வழி பாலத்தினுடாகவே தமது அன்றாட செயப்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.எனினும் குறித்த பாலம் உடைந்த போனதன் காரணமாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெண் பிள்ளை சுற்றுவட்ட பாதையினை பயன்படுத்த வேண்டியுள்ளது.

எனினும் அவசரமாக செல்ல வேண்டுமாயின் ஆபத்தினையும் உணராது இந்த உடைந்த பாலத்தினையே பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு பயன்படுத்தும் போது பலர் தவறி விழுந்து காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

தேர்தல் காலங்களில் பலர் வாக்குறுதிகள் வழங்கிய போதிலும் எவரும் செய்து கொடுக்கவில்லை எனவும்இ முன்னாள் அமைச்சர் திகாம்பரம் 15 லட்சம் ரூபா செலவு செய்து இதனை அமைத்து தருவதாக அடிக்கல் நாட்டியதாகவும் ஆனால் இது வரை பாலம் புனரமைக்கப்படவில்லை என்றும் இங்கு வாழும் மக்கள் தெரிவித்தனர்.

இதே வேளை அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களும் குறித்த பாலத்தினை புனரமைப்பு செய்து தருவதாக அடிக்கல் நாட்டி வைத்ததாகவும் ஆனால் அதுவும் இது வரை செய்து கொடுக்கவில்லை என்றும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த ஒற்றயடி பாதையில் பாலம் கடந்த 15 வருடங்களாக உடைந்து கிடப்பதனால் இங்கு வாழும் சுமார் 300 மேற்பட்ட மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் எனவே இது குறித்து உரிய கவனமெடுத்த உடனடியாக இப்பிரச்சினைகக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

நுவரெலியா விபத்தினால் பெரும் பதற்றம்

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா ஹக்கலை பிரதேசத்தில் இன்று (19.04.2021)அன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா பகுதியிலிருந்து வெலிமடை பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்று அப்பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் இருவரை மோதியுள்ளது.

இதன்போது, குறித்த இருவரும் படுங்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த காரை வீதியில் கைவிட்டு அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்தையடுத்து, அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடியதுடன், விபத்து இடம்பெற்ற இடத்தில் ஏற்படும் தொடர் விபத்துகளுக்கு தீர்வாக வேகத்தடையை ஏற்படுத்தி தருமாறுகோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை சுமார் ஒரு மணித்தியாலயம் முன்னெடுத்தனர். இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – மொட்டு கட்சி அறிவிப்பு

ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகிவருகின்றது.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்துக்கு விஜயதாச ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டார். அத்துடன், ராஜபக்சக்களின் செயற்பாடுகளையும் விமர்சித்தார். இவ்விவகாரம் தெற்கில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் இன்று அறிவித்தார்.

25 தமிழ்த் தொகுதிகளை உருவாக்குமாறு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் செந்தில் தொண்டமான் வலியுறுத்து

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இதொகாவின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, மாகாணசபைத் தேர்தல்களை புதியமுறைமையின் இரு வழிமுறைகள் தொடர்பில் தீர்க்கமாக ஆராயப்பட்டது. இவ்விரண்டு முறைமைகளில் எதையேனும் மற்றைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற சூழ்நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இரண்டு வழிமுறைகளுக்கும் நேரடியாக எதிர்ப்பைத் தெரிவித்தது.

இதன்போது, இதற்கான மாற்று வழிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த செந்தில் தொண்டமான், மலைநாட்டில் 10 இலட்சம் மலையக மக்கள் செரிந்து வாழ்கின்ற சூழ்நிலையில், புதிய தேர்தல் முறைமையின் படி, மாகாண சபைகள் மூலம் அந்தப் 10 இலட்சம் மக்களுக்கும் ஐந்து உறுப்பினர்கள் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்படுவர்.

தற்போதைய நிலைமையின் படி, மலையகமெங்கும் தமிழ் மாகாணசபை 25 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். ஆனால், புதிய முறைமையின்படி ‌ஐவர் மாத்திரமே கிடைக்கப்பெறுவர். அதனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இதன்போது, இந்த முறைமையைத் தாங்கள் தயாரிக்கவில்லை என்றும் கடந்த அரசாங்கமே இந்த முறைமையைத் தயாரித்துள்ளதென்றும், அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கருத்துரைத்த செந்தில் தொண்டமான், அதனால் தான், கடந்த அரசாங்கத்தின் போது, இந்த முறைமைக்குத் தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இந்த 25 பேர் கிடைக்கப்பெறக்கூடிய வழிமுறைகள் பற்றியும் கேள்வி எழுப்பினார். அத்துடன், இரட்டைத் தொகுதி தொடர்பிலும் இதன்போது அரசாங்கத்தால் யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதலளித்த செந்தில் தொண்டமான், இரட்டைத் தொகுதி எனும் பட்சத்தில், சிறுபான்மைக் கட்சிகள் கட்டாயமாகப் பெரும்பான்மைளோடு போகக்கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால், சுயமாகத் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பற்றுப் போகிறது. அதனால், அம்முறைமையையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்று எதிர்ப்புத் தெரிவித்தார்.

அந்த வகையில், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட வழிமுறைகள் சாத்தியப்படாது எனும் பட்சத்தில், தங்களின் ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் முன்வைக்குமாறு வலியுறுத்தப்பட்டது. இதன்போது கருத்துரைத்த செந்தில் தொண்டமான், நீங்கள் தற்போது 70,000 – 80,000 பேருக்கான தொகுதிகளை உருவாக்குகிறீர்கள். அவ்வாறு செய்யாமல், குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட தனித் தமிழ் மக்கள் மாத்திரம் உள்ளடங்கும் வகையில், 25 தமிழ்த் தொகுதிகளை உருவாக்குமாறும் அதற்குத் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

உதாரணமாக, சுமார் 14 இலட்சம் சனத்தொகையைக் கொண்டுள்ள கம்பஹா மாவட்டத்தையும் சுமார் 6 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட மொனராகலை மாவட்டத்தையும் எவ்வாறு தனித் மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறீர்களோ, அவ்வாறே தமிழ்ப் பிரதேசங்களுக்கும் தனித் தொகுதிகளை உருவாக்குமாறும் வலியுறுத்தினார்.

அத்துடன், அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில், அது எந்தக் கட்சியாயினும், மலையக மக்களின் பிரதிநிதிகள் வரும் வகையில் வழிமுறைகளை வகுத்து அறிவிக்கிறோம் என்றும், செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.

21 ஆம் திகதி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை – கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விடுமுறை

ஏப்ரல் 21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 08.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...