Home Blog Page 3527

‘நலமாக இருக்கிறார் முரளி’ – வைத்தியசாலையில் இருந்தும் வெளியேறினார்

இருதய நோய் காரணமாக நேற்று சென்னையில் உள்ள அப்பலோ  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்தையா முரளிதரன், சிகிச்சைகளின் பின்னர் இன்று வீடு திரும்பியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் சன் ரைசஸ் ஹத்ராபாத் அணியின் சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக முத்தையா முரளிதரன் செயற்பட்டுவருகின்றார். இதனால் அவர் இந்தியாவில்தான் தற்போது தங்கியுள்ளார்.

இந்நிலையிலேயே அவருக்கு நேற்று திடீரென இருதய நோய் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 273,810 பேருக்கு கொரோனா – 1,619 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.

இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,61,919 உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,619 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 178,769 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,29,53,821 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 144,178 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 19,29,329 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இமாலய இலக்கை விரட்டியடித்து டில்லி அணி வெற்றிநடை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 196 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து டெல்லி அணி வெற்றி பெற்றது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுகட்டின.   ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட் முதலில் பஞ்சாப்பை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி பஞ்சாப்பின் இன்னிங்சை கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் தொடங்கினர். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் இருவரும் டெல்லி பந்து வீச்சை பின்னியெடுத்தனர். ஒரு சில கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த இவர்கள் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 59 ரன்கள் சேகரித்தனர். தொடர்ந்து பம்பரமாக சுழன்ற இவர்கள் ரபடாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர் விரட்டி அவரை மிரள வைத்தனர். 10.1 ஓவர்களில் பஞ்சாப் 100 ரன்களை கடந்தது.

ஸ்கோர் 122 ரன்களை எட்டிய போது இந்த ஜோடியை ஒரு வழியாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மெரிவாலா பிரித்தார். அவரது பந்து வீச்சில் மயங்க் அகர்வால் (69 ரன், 36 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் தனது 23-வது அரைசதத்தை நிறைவு செய்த லோகேஷ் ராகுல் 61 ரன்களில் (51 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ரபடாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

கடைசிபகுதியில் ரன்வேகம் சற்று குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். கிறிஸ் கெய்ல் 11 ரன்னும், நிகோலஸ் பூரன் 9 ரன்னும் எடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதி ஓவரில் தமிழக ஆல்-ரவுண்டரான ஷாருக்கான் 2 பவுண்டரியும், ஒரு சிக்சரும் ஓடவிட்டு அணியின் ஸ்கோரை 190 ரன்களை தாண்ட வைத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. தீபக் ஹூடா 22 ரன்னுடனும், ஷாருக்கான் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். டெல்லி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், மெரிவாலா, ரபடா, அவேஷ்கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 196 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் (5.3 ஓவர்) எடுத்து அருமையான தொடக்கம் தந்தனர். தவானின் ரன்மழையால் டெல்லி அணி இலக்கை நோக்கி வேகமாக பயணித்தது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தவான் 92 ரன்களில் (49 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), ஜய் ரிச்சர்ட்சனின் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதற்கிடையே ஸ்டீவன் சுமித் 9 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ரிஷாப் பண்டும் (15 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. ஆனாலும் தவான் கொடுத்த அடித்தளத்தை பஞ்சாப் பவுலர்களால் அசைக்க முடியவில்லை.

டெல்லி அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்கஸ் ஸ்டோனிஸ் 27 ரன்னுடனும், லலித் யாதவ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

3-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது 2-வது வெற்றியாகும். பஞ்சாப் சந்தித்த 2-வது தோல்வியாகும்.

நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு

பிசியாக வலம் வரும் நேரத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சம்பளமே வாங்காமல் நடித்த நடிகர் யோகி பாபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வழக்கு எண், தனி ஒருவன், தில்லுக்கு துட்டு உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் தயாரிப்பில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘நாயே பேயே’. இந்த படத்தை சக்திவாசன் இயக்கி உள்ளார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பிசியான காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, படத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணாவுடனான நட்புக்காக இந்த படத்தின் விளம்பர பாடலில் நடனமாடி கொடுத்துள்ளார். அந்த பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுகுறித்து கோபி கிருஷ்ணா கூறியதாவது: “படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் யோகி பாபுவை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். படம் முழுக்க வரும் கதாபாத்திரம் என்பதால் அவரது கால்ஷீட் 40 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக முருகதாஸ் நடித்தார்.

இந்த படத்துக்கு தனது பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்று சொன்ன அவரே கொடுத்த ஐடியா தான் இந்த விளம்பர பாடல். ஒரு நாள் முழுக்க எங்களுடன் இருந்து நடித்து கொடுத்தார். சம்பளம் வாங்கிக்கொள்ளவில்லை. கேரவன் வசதி கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டார். எனக்காகவும் தினேஷ் மாஸ்டருக்காகவும் இந்த உதவியை செய்துகொடுத்தார்.

பிசியாக வலம் வரும் நேரத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பேருதவியை செய்த அவரை என்றும் மறக்க மாட்டோம். அவர் மட்டுமல்லாது சக்தி சரவணன், லொள்ளுசபா ஜீவா, பிக்பாஸ் பரணி, டைகர் தங்கதுரை, பிடிச்சுருக்கு அசோக் என அனைவருமே சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் நடித்து கொடுத்து உதவினார்கள்.

இவர்கள் இடம் பெற்றுள்ள பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் வியாபாரத்துக்கும் உதவியுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார். கலகலப்பான குடும்ப படமாக உருவாகி இருக்கும் நாயே பேயே படம் வரும் 23 ம் திகதி வெளியாக இருக்கிறது.

நடிகை சமீரா வெட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருக்குறீர்கள் என்பதை நான் அறிவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆலியா பட், அமீர் கான், கோவிந்தா, அக்‌ஷய் குமார், கேத்ரீனா கைஃப், சோனு சூட் உள்ளிட்ட பிரபலங்கள் கடந்த வாரங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் தற்போது சமீரா ரெட்டியும் இணைந்துள்ளார்.

விவேக்கின் நினைவாக இலங்கையிலும் மர நடுகை

மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் இணுவில் இளைஞர்களால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

ஒரு கோடி மரம் நடுகை செயற்திட்டத்தை நடிகர் விவேக் முன்னெடுத்து வந்திருந்தார். அந்நிலையில் , கடந்த சனிக்கிழமை அவர் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பலர் மரநடுகை செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜா தனகோபியின் ஏற்பாட்டில் இணுவில் இளைஞர்கள் மரநடுகையில் ஈடுபட்டனர்.

அதேவேளை “Jaffna Jaguars” எனும் அமைப்பொன்றினை உருவாக்கி அதில் தன்னார்வமுடைய இளையோரை இணைத்து மரநடுகை செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் , அதில் ஆர்வமுள்ள இளையோர் இணைந்து கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி 23 ஆம் திகதி திறக்கப்படும்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பில் துணைவேந்தர், பேராசிரியர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.

எனினும் அதனைக் கண்டித்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது.

பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமானது.

பசறையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

சட்ட விரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை பசறைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

அத்துடன் இவ் அகழ்விற்கு பயன்படுத்திய பெருமளவிலான உபகரணத் தொகுதிகளையும், பொலிசார் மீட்டுள்ளனர்.

பசறைப் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட 19வது மைல் பகுதியிலேயே, மேற்படி இரத்தினக்கல் அகழ்வு இடம்பெற்றது.

பசறைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றினையடுத்து, விரைந்த பொலிசார், 19வது மைல் பகுதியில் இரத்தினக்கல் அகழ்ந்துகொண்டிருந்த மூவரை கைது செய்து, அகழ்விற்கு பயன்படுத்திக் கொண்டிருந்த பெருமளவிலான உபகரணங்களையும் மீட்டனர்.

பசறை – மீதும்பிட்டியவில் இருவரும், ஹொப்டன் என்ற இடத்தில் ஒருவருமாக மூவரே, கைது செய்யப்பட்டிருப்பவர்களாவர். இவர்களை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய, பசறைப் பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அரச கூட்டுக்குள் குழப்பம் – பங்காளிகளுடன் மஹிந்த இன்று அவசர சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று மாலை 6.30 இற்கு நடைபெறவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணிக்குள் அண்மைக்காலமாக முறுகல் நிலை நீடித்துவருகின்றது. இதனால் அரசுமீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலமும் சர்ச்சைக்குரிய காரணியாக மாறியுள்ளது. இதற்கு விஜயதாச ராஜபக்ச உட்பட ஆளுங்கட்சியிலுள்ள எம்.பிக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தேரர்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பை வெளியிட்ட தன்னையும், முறுத்தெட்டுவே ஆனந்த தேரரையும் ஜனாதிபதி அச்சுறுத்தினார் என விஜயதாச எம்.பி. வெளியிட்ட தகவலும் தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நெருக்கடி நிலைமை சமாளிப்பதற்கும், மோதல் நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் குறித்த சட்டமூல விவகாரத்தை பிரதமர் மஹிந்த கையில் எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இன்று நடைபெறும் சந்திப்பின்போது மாகாணசபைத் தேர்தல் சட்டமூலம் பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் அடுத்தாண்டுவரை ஒத்திவைப்பு?

மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடத்துக்குள் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என அரச உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தேர்தல் முறைமை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய யோசனைக்கு பங்காளிக்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இவ்விவகாரம் உட்பட மேலும் சில விடயங்களாலேயே மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் இடம்பெறாது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தொகுதி மற்றும் விகிதாசாதார அடிப்படையில் (70 இற்கு 30) மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் தொகுதியொன்றுக்கு ஒரு கட்சி மூன்று வேட்பாளர்களை நிறுத்த முடியும் எனவும், மாவட்ட மட்டத்தில் இரு போனஸ் ஆசனங்களை வழங்க வேண்டும் என்ற யோசனையும் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் 19 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.

அதேவேளை, அடுத்த வருடம் ஆரம்பத்தில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் அரச வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...