Home Blog Page 3530

” நாடு உருப்பட வேண்டுமானால், பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தடை செய்ய வேண்டும்”

பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர் ஆகிய பெளத்த தீவிரர்கள், இப்போது புதிய பாடல் ஒன்றை பாடுகிறார்கள்.இந்த அரசு தமது பெளத்த அமைப்புகளை தடை செய்ய போகிறது என்ற புரளியை கிளப்பி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.

உண்மையில் இந்நாடு உருப்பட வேண்டுமானால், பெளத்த தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தடை செய்யத்தான் வேண்டும். நான் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரிப்பேன். ஆனால், இந்த அரசு இப்போது இவர்களை தடை செய்து தற்கொலை செய்ய போவதில்லை என தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

முஸ்லிம் அரசியல்வாதிகள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ரிசாத், ரவுப் மீது, உயிர்த்த ஞாயிறு குண்டு தொடர்பில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கான சாட்சியம் இல்லை. அப்படி சாட்சியங்கள் இருந்தால், இந்த அரசே சும்மா விடாது.

தேரர்களிடம் சாட்சியம் இருந்தால் அதை விசாரணை கமிசனிடம் அவர்கள் தர வேண்டும். ஆனால், அப்படி இவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை.

தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மட்டுமே இருக்கிறது. தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி பேசும் இவர்கள் தமது அடிப்படைவாத, இனவாதத்தை தேசபக்தியாக காட்டுகிறார்கள்.

ஆகவே இன்று, அரசின் பிரதான கட்சியில் உள்ள தீவிரவாதிகளையும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட நபர்களையும் கொண்டு, எதிரணியிலும் சிங்கள பெளத்த தீவிரர்கள் கிடைத்தால், அவர்களையும் சேர்த்து, இந்த அரசின் மீதான சிங்கள மக்களின் அதிருப்தியை திசை திருப்பி, மீண்டும் ஒருமுறை சிங்கள பெளத்த அரசு ஒன்றை அமைக்க முயல்கிறார்கள்.

அதாவது இன்னொரு ரவுன்ட் வர முயல்கிறார்கள்.

இனிவரும் மாற்று அரசு, ஒரு சிங்கள பெளத்த அரசாக இருப்பதை நாம் ஏற்க முடியாது. உலகமும் ஏற்காது. அது ஒரு இலங்கை (ஸ்ரீலங்கா) அரசாக மட்டுமே இருக்க முடியும்.

இல்லாவிட்டால் அடுத்த இரண்டு வருடத்தில், இலங்கை நாடு அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் தோற்றுப்போன நாடாக உலகில் ஒதுக்கப்படும். அதன்பிறகு சாம்பலில் இருந்து எழுந்து வர வேண்டியதுதான்.

நீரில் மூழ்கி மாயமான தந்தை, மகனின் சடலங்கள் மீட்பு!

பதுளை – ஹல்துமுல்ல, வெலிஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த தந்தை மற்றும் மகனது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹல்தமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஓயாவில் நேற்று வியாழக்கிழமை மாலை நீராடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

கொழும்பு – மஹரகம பகுதியைச் சேர்ந்த நான்கு பேரைக் கொண்ட குடும்பத்தினர். சித்திரை புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு பதுளை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளதுடன், மீண்டும் கொழும்புக்கு வந்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெலி ஓயாவில் இவர்கள் நீராடிக் கொண்டிருக்கும் போது, திடீரென நீரின் வேகம் அதிகரித்துள்ளது. பின்னர் நால்வரும் நீரிழ் மூழ்கியுள்ளதுடன் இருவரை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் காப்பாற்றியுள்ளனர்.

எனினும் தந்தையும் மகனும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர். அதற்கமைய, அவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நேற்று மாலையே தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், இன்று வெள்ளிக்கிழமையே அவர்களிருவரதும் சடலங்களும் மீட்கப்பட்டிருந்தன.

சம்பவத்தில் 52 வயதுடைய தந்தையும், அவருடைய 17 வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்தமுல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

க.கிசாந்தன்

” ஜனாதிபதி என்னை மிரட்டுகிறார் – உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” -விஜயதாச

” கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை. இரகசியமாகவே அது கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இச்சட்டமூலத்தால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை நேற்று அம்பலப்படுத்தினேன்.  துறைமுக நகர் சீனாவின் கொலணியாகும் நிலையை தடுக்க வேண்டும் எனவும் கூறினேன்.

இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எனக்கு அழைப்பை ஏற்படுத்தினார். கடும் சினத்துடன், மிகவும் கீழ்த்தரமாக என்னை விமர்சித்தார். அரச தலைவர் ஒருவருக்கு பொருத்தமற்ற விதத்தில் அவர் செயற்பட்டாலும். ஜனாதிபதி கையாண்ட பாஷையிலேயே நானும் பதில் கொடுத்தேன். ஜனாதிபதி இவ்வாறு அச்சுறுத்துவது பாரதூரம். உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.”

இவ்வாறு ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

மருமகனை அடித்துக் கொலைசெய்த மாமனார் – வெதமுல்லை தோட்டத்தில் கொடூரம்

கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் நேற்றிரவு (15.04.2021) மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.வாய்தர்க்கம் முற்றியதில் மாமனார் மருமகனை அருகில் இருந்த பொல்லால் தாக்கியுள்ளார்.

இதன்போது காயமடைந்த மருமகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் வசித்த 35 வயதான கணேசன் விஜயகுமார் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் தொடர்பில் 1990 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பெடுத்து அறிவித்த நிலையில் நோயாளர் காவு வண்டி அங்கு வர தாமதமானதால் தாக்குதலை நடத்திய மாமா தனது முச்சக்கர வண்டி மூலம் காயமடைந்த வரை நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறு கொண்டுச் செல்லும் போது நோயாளர் காவு வண்டி இடையில் வந்துள்ளது.

அப்போது நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் காயமடைந்தவரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்துள்ளளளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் தாக்குதலை நடத்தியவர் சடலத்தை கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வீசிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தாக்குதலை நடத்திய மாமா கொத்மலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதைனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு – வைத்தியசாலையில் அனுமதி!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நடிகர் விவேக் இன்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விவேக் நேற்றுதான் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் எனத் தெரிவித்து இருந்தார்.

வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு சுருதி ஹாசன் வழங்கிய பதில்…

கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன.

தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் ‘மேடம், பிளீஸ் உங்களது வாட்ஸ் ஆப் நம்பரைக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த நடிகை சுருதி ஹாசன், போலீஸ் அவசர உதவி எண் ஆன 100 என்ற நம்பரைக் குறிப்பிட்டிருந்தார். நடிகர் சுருதி ஹாசனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாகன விபத்துகள் – 48 மணிநேரத்தில் 30 பேர் பலி! 150 பேர் காயம்!!

நாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 30 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.அத்துடன் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

வாகன விபத்துகளால் நேற்று மாத்திரம் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன விபத்துகளால் நாளொன்றில் அதிகளவானோர் உயிரிழந்த சம்பவமாக அது பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்களே அதிகளவு விபத்துக்குள்ளாகியுள்ளன.

கொத்தமல்லியில் இத்தனை மருத்துவ குணங்களா? இந்த நோய் எல்லாம் விரட்ட உதவுமாம்!

கொத்தமல்லி அல்லது தனியா என்பது, பாரம்பரிய சமையல் முறைகளில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு மருத்துவம் மிக்க பொருளாகும்.

இதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

அந்தவகையில் இதனை உணவில் சேர்த்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • கணினிகளில் வேலை செய்வோருக்கு கண்கள் எளிதில் பாதிப்படையும். இதற்கு கொத்தமல்லி விதையை நீரில் கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் புத்துணர்வு பெறும்.
  • இதய நோய்கள் ஏற்படாமல் இருக்க அடிக்கடி உணவில் கொத்தமல்லி விதைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு அடிக்கடி புளித்த ஏப்பம் ஏற்படும். இந்த புளித்த ஏப்பத்தை போக்க தனியாவுடன் சிறிது சோம்பு சேர்த்து சாப்பிட்டால் குணமடையும்.
  • கொத்தமல்லி விதை பொடியை தொடர்ந்து உபயோகப்படுத்தும் போது எளிதில் ஜீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணமடைய செய்யும்.
  • ஜலதோஷம் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும். இவர்கள் கொத்தமல்லி விதையை அரைத்து நெற்றியில் ஒத்தல் போட்டால் தலைவலி, மூக்கடைப்பு குணமாகும். மேலும் பித்தத் தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் கொத்தமல்லியை அரைத்து ஒத்தடம் கொடுத்தால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும்.
  • தோலில் வெடிப்புகள் சரியாக, தனியா கஷாயம் செய்து அருந்தவும். ஒரு தேக்கரண்டி விதைகளை கொதிக்கச் செய்து, விழுதாக்கி அதன் மீது தடவவும்.
  • கொத்தமல்லி விதையை வாயில் வைத்து மென்று உமிழ்நீரை இறக்கினால் சில நேரங்களில் பல் இடுக்குகளில் உள்ள கிருமிகளாலும், குடல் அல்லது வயிற்றுப் புண்களாலும் வர கூடிய வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு இரத்தப் போக்கை கட்டுப்படுத்த தனியா விதைகளை கஷாயம் செய்து பாலுடன் அருந்தவும்.

கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

கோணாவில் மத்தியை சேர்ந்த செல்வநாயகம் விதுசன் வயது 25 என்ற இளைஞனே
தவறான முடிவெடுத்து இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தேவேளை கடந்த வாரம் இதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் யுவதி
ஒருவரும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சமீப காலமாக தற்கொலைகள், அதிகரித்து
வருகின்றதோடு குறிப்பாக இளம் சமூகத்தினர் அதிகளவில் தற்கொலை
செய்துகொள்கின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் போரில் நாமே வென்றோம் – தலீபான்கள் அறிவிப்பு

ஏறத்தாழ 20 ஆண்டு காலத்துக்கு பின்னர் இப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை அமெரிக்கா முழுமையாக திரும்பப்பெற முடிவு செய்து அறிவித்துள்ளது

அமெரிக்காமீது தாக்குதல் நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் தஞ்சம் அளித்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடுத்தது. அங்கு தலீபான்களின் ஆட்சியை அகற்றியது. மக்களாட்சியை மலரச்செய்தது.

எனினும் தொடர்ந்து அங்கு அமெரிக்கப்படைகள் இருந்து, தலீபான்களை ஒடுக்க உள்நாட்டு படைகளுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன. ஏறத்தாழ 20 ஆண்டு காலத்துக்கு பின்னர் இப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை அமெரிக்கா முழுமையாக திரும்பப்பெற முடிவு செய்து அறிவித்துள்ளது.

இதுகுறித்து அங்குள்ள பால்க் மாவட்டத்தின் தலீபான் தளபதியும், நிழல் மேயருமான ஹாஜி ஹெக்மாட் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், “நாங்கள்தான் போரில் வெற்றி பெற்றிருக்கிறோம். அமெரிக்கா தோற்றுப்போய் விட்டது. நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். நாங்கள் சமாதானத்துக்கு தயார். அதே நேரத்தில் புனிதப்போருக்கும் தயாராகவே உள்ளோம்” என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, “நாங்கள் ஷரியத் சட்டத்தின் அடிப்படையிலான இஸ்லாமிய அரசு வர வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களது கோரிக்கை ஏற்கப்படுகிறவரையில் போர் தொடரும். ஆப்கானிஸ்தான் அரசியல் கட்சிகளுடன் அதிகாரப்பகிர்வுக்கு சாத்தியம் உண்டா என்று கேட்கிறீர்கள். இதை கத்தாரில் உள்ள எங்களது அரசியல் தலைமை தீர்மானிக்கும். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் நாங்கள் ஏற்போம்” எனவும் கூறினார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...