Home Blog Page 3531

விசேட அதிரடிப்படை துப்பாக்கிச்சூடு – யாழில் இருவர் காயம்

விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தி்ல் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலேயே இருவர் காயமடைந்துள்ளனர் என பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் சென்னை-பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டெல்லிக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதில் சென்னை நிர்ணயித்த 189 ஓட்டங்கள் இலக்கை டெல்லி தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், பிரித்வி ஷா இருவரும் அரைசதம் விளாசி எளிதில் எடுக்க வைத்து விட்டனர்.

சென்னையின் பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது. ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு பெயர் போன தீபக் சாஹர் அத்தகைய பந்துவீச்சை மறந்துவிட்டது போல் பந்து வீசினார். அத்துடன் தொடக்கத்தில் பவுன்சர்களை வீசி நெருக்கடி கொடுக்கவும் சென்னை பவுலர்கள் தவறினர்.

ஒரே ஆறுதல் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய சுரேஷ் ரெய்னா அரைசதம் அடித்ததுதான். கேப்டன் டோனி ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றினார். வலுவான பஞ்சாப்புக்கு எதிராக அதுவும் வான்கடேவில் சாதிக்க வேண்டும் என்றால் குறைந்தது 200 ரன்கள் அவசியமாகும். பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்து தெறிக்கவிட்டால் வெற்றிக்கணக்கை தொடங்கலாம்.

தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நிகிடி தாமதமாக வந்து இன்னும் 7 நாள் தனிமைப்படுத்துதலை முடிக்காததால் இன்றைய ஆட்டத்திலும் விளையாடமாட்டார் என்று சென்னை பயிற்சியாளர் பிளமிங் ஏற்கனவே கூறியுள்ளார். இதனால் பந்துவீச்சில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை 4 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 221 ரன் குவித்த போதிலும் வெற்றிக்காக கடைசி பந்து வரை போராட வேண்டி இருந்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் (91 ரன்), தீபக் ஹூடா( 64 ரன்), கிறிஸ் கெய்ல்(40 ரன்) அசத்தினர். பேட்டிங்கில் வலிமையான பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்திலும் ரன்வேட்டைக்கு தீவிரமாக உள்ளது. பஞ்சாப்பின் அதிரடி ஜாலத்துக்கு சென்னை அணி முட்டுக்கட்டை போடுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் சென்னையும், 8-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. கடந்த சீசனில் இரு லீக்கிலும் பஞ்சாப்பை சென்னை அணி துவம்சம் செய்தது நினைவு கூரத்தக்கது.  இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பதுளையில் மற்றுமொரு விபத்து – ஒருவர் பலி! 13 பேர் காயம்!!

பதுளை, கந்தகெட்டிய பிரதேச போபிட்டிய பகுதியில் நேற்று மாலை வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்துவிபத்துக்குள்ளாகியதில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், ஐந்து சிறுவர்கள் அடங்கலாக பதின்மூன்று பேர் படுகாயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடராஜா மலர்வேந்தன்

கவனிப்பாரற்று கிடக்கும் பிரஜாசக்தி நிலையம்

மலையகத்தில் மக்களின் நலன் கருதி அமைக்கப்படும் பொது நிறுவனங்கள் இன்று கவனிப்பாரற்று கிடக்கின்றன. அந்தவகையில் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கமைய அமைக்கப்பட்ட பொகவந்தலாவை கெர்க்ஸ்வோல்ட் தோட்ட பிரஜாசக்தி நிலையமானது சுமார் 12 வருட காலமாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது.

மலையக மாணவர்களுக்கு தொழில்பயிற்சி கல்வியை வழங்கும் நோக்குடன் 2008ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமானினால் இந்நிலையமானது அமைக்கப்பட்டது.

கெர்கஸ்வோல்ட் தோட்டம் அதேபோல் சாஞ்சிமலை , வானகாடு , பொகவந்தலாவ நகர மாணவர்கள் என 5000 ற்கும் மேற்பட்டவர்கள் இந்த பிரஜா சக்தி நிலையத்தினை பயன்படுத்தி வந்தனர். இருந்த போதிலும் 2008ஆம் ஆண்டு இனந்தெரியாத நபர்களால் இந்நிலையத்தின் கண்ணாடி கல்லெறிந்து சேதபடுத்தப்பட்டு அதில் உள்ள உபகரணங்கள் அனைத்து திருடப்பட்டதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த ஆட்சிகாலத்திலும் எவரும் இதை கண்டு கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி புதிய அரசாங்கம் இதற்கு புத்துயிர் கொடுத்து திறக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மின்னல் தாக்கி 3 விவசாயிகள் பலி – முல்லைத்தீவில் சோகம்!

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்கியதில் மூன்று விவசாயிகள் பலியாகியுள்ளனர்.

குறித்த விவசாயிகள் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே, குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் குமுழமுனை மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 35 மற்றும் 46 வயதுகளையுடைய விவசாயிகளே உயிரிழந்துள்ளனர்.

‘கனகரத்னத்தின் பதவி தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டது’

கண்டி – உடபளாத பிரதேச சபையின் உறுப்பினர் குமாரவேல் கனகரத்னத்தின் கட்சி உறுப்புரிமையை இல்லாது செய்வதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி எடுத்த தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைகால தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15) இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடையுத்தரவு செலுப்படியாகும் என நீதிமன்றம் இன்று அறிவித்ததாக, குமாரவேல் கனகரத்னம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குமா துனுசிங்க தெரிவிக்கின்றார்.

ஒருமித்த முற்போக்கு கூட்டணி சார்பில் உடபளாத பிரதேச சபைக்கு தெரிவான குமாரவேல் கனகரத்னம், கட்சியின் மாதாந்த கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக பங்குப்பற்றாமையின் ஊடாக, அவர் கட்சியின் சட்டங்களை மீறி, கட்சிக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்து, அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலக்குவதாக 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் திகதியிடப்பட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் கடித உறையின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது.

கட்சியின் தலைவர் மனோ கணேசன், இந்த அறிவித்தலை, கண்டி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு கட்சியின் தலைவர் மனோ கணேசனினால் பதவி விலக்கப்பட்டமைக்கான அறிவித்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, குமாரவேல் கனகரத்னத்தின் பிரதேச சபை உறுப்பினர் பதவி இல்லாது செய்யப்படுவதை வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்படும் என கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி குமாரவேல் கனகரத்னத்திற்கு பதிவு தபால் மூலம் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த தீர்மானத்திற்கு எதிராக குமாரவேல் கனகரத்ன, கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து குமாரவேல் கனகரத்னம், இடைநிறுத்தப்பட்டமையை 14 நாட்களுக்கு தடை செய்யும் வகையில் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவிற்கு அமைய, குமாரவேல் கனகரத்னத்திற்கு எதிராக எந்தவொரு தீர்மானமும் நீதிமன்ற உத்தரவு வரும் வரை கட்சியினால் எட்ட முடியாது என சட்டத்தரணி தெரிவிக்கின்றார்.

கட்சிக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இடைகால தடையுத்தரவு காரணமாக, குமாரவேல் கனகரத்னத்தின் பதவி பறிப்போவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மேலும் கூறுகின்றார். இந்த வழக்கு மீதான விசாரணைகள் ஏப்ரல் மாதம் 29ம் திகதி இடம்பெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நன்றி – ட்டூ சிலோன்

‘அரச பெருந்தோட்டங்களில் இன்னும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை’

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் இழுப்பறி நிலையை சந்திக்கும் என்று ஜே.வி.பியின்  யாழ்.மாட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (15.04.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. அதாவது எமது கடலில் உள்ள அனைத்து வளங்களையும் அள்ளிச் செல்லும் அளவுக்கு அவர்களின் ஆக்கிரமிப்பு உள்ளது. எதிர்காலத்தில் எமக்கு கடல் வளம் அற்று போகும் நிலைமை உருவாகியுள்ளது.

இந்திய மீனவர்கள் எமது கடல் வளத்தை அழித்தும் சூறையாடியும் வருகின்றனர். நாம் இந்த மீனவர் பிரச்சினை சம்பந்தமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அண்மையில் சந்தித்து பேசியுள்ளோம். இதன்போது இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கு முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். ஆனால் இதுவரை தீர்வை வழங்காமையால் வடக்கு மீனர்கள் அனாதரவாக்கப்பட்டுள்ளனர்.

இப்போது முன்பைவிட மோசமாக இந்திய மீனவர்கள் இத்துமீறும் நிலை உருவாகியுள்ளது. இந்த பிரச்சினையில் இந்தியா இரட்டை வேடம் பூண்டுள்ளது. விசேடமாக தமிழக அரசியல் தலைவர்கள் இந்த பிரச்சினைக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் நிலையுள்ளது. ஆகவே இவ்வாறு செயற்பட வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். இலங்கை என்பது சுயாதீனமாடு என்றவகையில் எமது கடற்பரப்;பை கொள்ளையடிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம். எனவே ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் எமது கடல் வளத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.’

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.

‘1000 ரூபா சம்பள அதிகரிப்பு உறுப்படியாக கிடைக்கின்றதா? என சந்தேகம் எழுந்துள்ளது. தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. சித்திரை புத்தாண்டை கொண்டாட முடியாத ஒரு துர்பாக்கிய நிலையே தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே ஆயிரம் ரூபாவுக்கு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இன்றும் சிலர் 1000 ரூபாவுக்கு வேட்டு வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே ஆயிரம் ரூபா அதிகரிகரிப்பை அரசாங்கம் முதலில் அரச தோட்டங்களில் வழங்க வேண்டும். அதேபோல் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் இழுப்பறி நிலையை அதாவது பின்னடைவை சந்திப்பதை தவிர்க்க முடியாது. ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களும் இன்று மன விரகத்தியில் உள்ளனர்.’ என்றார்.

க.கிசாந்தன்

அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் பாதிப்பு உண்டா?

பொதுவாக உடற்பயிற்சி செய்வது நம் ஒட்டுமொத்த உடலுக்குமே நன்மை அளிக்கக் கூடியது.

ஆனால் அதிகப்படியான உடற்பயிற்சியை செய்வது உடலுக்கு பல பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் கீழ்க்கண்ட பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • உடலில் இருக்கும் ஆற்றல் முழுவதையும் உடற்பயிற்சிக்கு என்றே பயன்படுத்தி விட்டால் மற்ற நேரங்களில் நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். இரவில் 7-8 மணி நேரம் தூக்கம், காலையில் நல்ல சாப்பாடு போன்றவற்றை எடுத்தால் கூட இந்த சோர்வு உங்களை விடாது.
  • உடற்பயிற்சியை கடினமாக செய்யும் போது உங்கள் தசைகள் பதட்டமாகின்றன. இது படிப்படியாக களத்தில் உங்கள் செயல்திறன் அளவைக் குறைக்கிறது. இது உங்களை விரக்தியடையச் செய்கிறது. எனவே பயிற்சி அமர்வுகளுக்கு இடையில் நீங்கள் ஓய்வாக இருக்க வேண்டும்.
  • தீவிரமான உடற்பயிற்சி பழக்கம் இல்லாதது திடீரென அதை மேற்கொள்ளும் போது காயங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தசை வலி, மூட்டு திரிபு, முதுகுவலி ஆகியவை சில பொதுவான உடற்பயிற்சிக் காயங்கள் ஆகும்.
  • ஜிம்மில் அதிகமாக உடற்பயிற்சி செய்வதனால் இரும்புச் சத்தை அதாவது ஆற்றலை இழப்பதால் இரவில் தூக்கம் வராமல் தவிக்க நேரிடலாம். உங்கள் தசைகள் அழுத்தமாக இருக்கும், நீங்கள் அமைதியற்றவராக உணரலாம் மற்றும் தூங்குவது கடினமாக இருக்க வாய்ப்புள்ளது .
  • அதிகப்படியான பயிற்சி என்பது நேர்மாறாக இருக்கிறது. இது உடலில் கார்டிசோல் அளவை அதிகரிக்கிறது, இது கடுமையான மனநிலை மாற்றங்கள், நாட்பட்ட மன அழுத்தம், கவலைக் கோளாறுகள் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடும்.

ரணில் பாராளுமன்றம் செல்வது உறுதி – வெளியானது தகவல்! (காணொளி)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்னும் ஒரிரு மாதங்களுக்குள் பாராளுமன்றம் செல்வார் என அக்கட்சியின் உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐ.தே.கவுக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்துக்கே ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளார்.

புத்தாண்டில் சோகம்! விபத்துகளில் 12 பேர் பலி – 74 பேர் காயம்!!

வாகன விபத்துகளால் நேற்று மாத்திரம் 12 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். அத்துடன், 121 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

விபத்துகளில் 74 பேர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்துகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. அவற்றின் எண்ணிக்கை 53 ஆகும். 30 ஆட்டோக்களும் விபத்துக்குள்ளாகின.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...