Home Blog Page 3532

சீன பாதுகாப்பு அமைச்சர் ஏன் இலங்கை வருகிறார்?

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீஃபெங் (Wei Fengh) உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதியானபோதிலும் திகதி விபரம் உத்தியோகப்பூர்வமாக வெளிவரவில்லை. எனினும் இம்மாதத்துக்குள் அவரின் விஜயம் உறுதியாகியுள்ளது.

இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அரச உயர்மட்ட பிரதிநிதிகளுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார்.

சீன கம்யூனிஸ்கட்சியின் உயர்மட்ட பிரமுகர் யெங் ஜியேச்சி கடந்த ஒக்டோபர் மாதம் உயர்மட்ட குழுவுடன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அதன்பின்னர் சீனாவின் உயர்மட்ட அதிகாரியொருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் 2ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அதேவேளை, சீன பாதுகாப்பு அமைச்சின் இலங்கை பயணம் தொடர்பில் இந்தியா தீவிர கவனம் செலுத்தியுள்ளது. அவரின் பயண நோக்கம் பற்றி இராஜதந்திர மட்டத்தில் கேள்வி எழுப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துக்கணிப்பால் அமைச்சர்கள் சிலர் குழப்பத்தில்

இலங்கையில் சிறப்பாகச் செயற்படும் புகழ்வாய்ந்த அமைச்சர்கள் யாரென முகநூலொன்றில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி முதலிடம் பிடித்துள்ளார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ 2ஆவது இடத்தையும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முகநூலில் ஏன் திடீரென இவ்வாறானதொரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது, இதன் பின்புலம் என்னவென அரசியல் களத்திலும் ஆராயப்பட்டுள்ளது. ஏனெனில் முக்கியமான சில புள்ளிகளும் இதில் வாக்களித்துள்ளதாலேயே அரசியல் வாதிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆளுந்தரப்புக்கு சார்பாக செயற்படும் சமூகவலைத்தள செயற்பாட்டாளர்களே இதனை செய்திருக்கக்கூடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இதை எதிரணி பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளவில்லை.

எனினும், மேற்படி கருத்துக் கணிப்பால் அமைச்சர்கள் சிலர் குழப்பமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இனிவரும் காலப்பகுதியில் அமைச்சின் செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், மக்கள் மனங்களை வெல்லக்கூடிய வகையில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் தமது செயலாளர்களுக்கு அந்த அரசியல் வாதிகள் ஆலோசனை வழங்கியுள்ளனராம்.

கும்பமேளாவில் பங்கேற்ற 1,000 பேருக்கு கொரோனா!

ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹரித்வாரில் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான மகா கும்பமேளா வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. கும்பமேளாவில் பங்கேற்று கங்கை நதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கானவர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இங்கே வருபவர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டியது கட்டாயம்.

அதே வேளையில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. எனினும் அளவுக்கதிகமாக பக்தர்கள் குவிவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே 2 நாட்களில் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கும்பமேளா நடைபெறும் பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அதியுச்ச அதிகாரத்துக்காக கடுமையாக உழைப்போம்!

“உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு இன்று தத்தளிக்கின்றது. இது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. விசேடமாக இந்த ஆட்சிக்கு உகந்ததல்ல. தமிழ் மக்கள் கோருவது, பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் போதிய அதியுச்ச அதிகாரப் பகிர்வையே. அதற்காக ஒன்றுபட்டு உழைப்போம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கின்றார்கள். என்னதான் துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும் எமது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஜனநாயக வழியில் இறுதி வரைப் போராடி எமக்கான உரிமைமையை நாம் வென்றெடுக்க வேண்டும். இந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் ஓரணியில் பயணிக்க வேண்டும்.”

இந்த நாடு தொடர்ந்து தற்போதைய பாதையில் செல்ல முடியாது. தற்போதைய பாதை பேராபத்து மிக்கது.

நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படக்கூடிய வகையில் தேசிய பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அரசு விலகக்கூடாது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லுறவுகளை அரசு பேண வேண்டும். இவையெல்லாம் தவிர்க்க முடியாத கருமங்களாகும்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு இன்று தத்தளிக்கின்றது. இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. விசேடமாக இந்த ஆட்சிக்கு உகந்ததல்ல.

தமிழர்களாகிய நாங்கள் நாட்டைப் பிரித்துத் தருமாறு கோரவில்லை. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் போதிய அதியுச்ச அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட்டு எங்கள் இறைமையை நாங்கள், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் – தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் பயன்படுத்த வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை.

உலகத்தில் பல்வேறு நாடுகளில் இவ்விதமான நிலைமை இருக்கின்றது. இந்த நிலைமை எமது பிரதேசங்களிலும் ஏற்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம். இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம்; உழைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது” – என்றார்.

தலைதூக்கும் கொரோனா – மீண்டும் ஒத்திவைக்கப்படுமா ஒலிம்பிக் போட்டிகள்?

ஜப்பானில் இவ்வாண்டு இடம்பெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ளது.

தற்போது ஜப்பானில் COVID-19 நோய்ப்பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தோக்கியோ அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, திட்டமிட்டபடி போட்டிகளை நடத்துவது மிகவும் சிரமம் என்று தோக்கியோ மருத்துவச் சங்கம் எச்சரித்துள்ளது.

உலக நாடுகள் சிலவற்றிலும் நோய்ப்பரவல் அதிகரித்திருப்பது மேலும் கவலையைக் கூட்டியுள்ளது.

நோய்ப்பரவல் தீவிரமானால் பார்வையாளர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதும் சிரமம் என்று சங்கம் தெரிவித்துள்ளது.

போட்டிகள் தொடங்க இன்னும் 100 நாள்கள் உள்ள நிலையில் தோக்கியோ மருத்துவச் சங்கம் அவ்வாறு கூறியுள்ளது.

இருப்பினும் போட்டியை வெற்றிகரமாக நடத்த ஏற்பாட்டுக்குழு நம்பிக்கைக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் COVID-19 நோய்ப்பரவல் காரணமாக இவ்வாண்டு ஜூலை 23 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

படக்குழுவினருக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்டார் ஷாருக்கான்

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், படக்குழுவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஷாருக்கான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், ரன்பீர் கபூர். கோவிந்தா, கார்த்திக் ஆர்யன், செந்தில், டைரக்டர் சுந்தர்.சி. நடிகைகள் நக்மா, நிவேதா தாமஸ், கவுரி கிஷான், ஐஸ்வர்யா லட்சுமி, பூமி பெட்னெகர், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்கி உள்ளனர். சிலர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஷாருக்கான் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. பதான் என்ற இந்தி படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு துபாயில் நடந்தது. தற்போது மும்பையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். பதான் படக்குழுவினருக்கு முன் எச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்ததில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவல் அறிந்ததும் ஷாருக்கான் அதிர்ச்சியடைந்தார். அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். பதான் படத்தில் தீபிகா படுகோனே, ஜான் அபிரகாம் ஆகியோரும் நடிக்கின்றனர்.

விராட் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் பாபர் அசாம் – 39 ஆவது இடத்தில் மெத்யூஸ்

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் (865 புள்ளி) விராட் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதன்படி துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் (865 புள்ளி)  முதலிடத்தை பிடித்துள்ளார்.

கடந்த வாரம் செஞ்சூரியனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 94 ஓட்டங்கள் குவித்ததால் 13 தரவரிசை புள்ளிகளை அறுவடை செய்த பாபர் அசாம் 2-வது இடத்தில் இருந்து நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

அத்துடன் 41 மாதங்கள் நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்து இருந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 4-வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றுள்ளார். ஏற்கனவே அந்த நாட்டை சேர்ந்த ஜாகீர் அப்பாஸ் (1983-84), ஜாவித் மியாண்டட் (1988-89), முகமது யூசுப் (2003) ஆகியோர் முதலிடம் வகித்துள்ளனர்.

அதேவேளை, இலங்கை அணி வீரர் மெத்யூஸ் 39 இடத்திலும், குசல் மெண்டிஸ் 48 ஆவது இடத்திலும் உள்ளனர்.

 

மதுபோதையில் வாகனம் செலுத்திய 758 சாரதிகள் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 758 பேர் கடந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரதி பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப்பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

புத்தாண்டு காலப்பகுதி நிறைவடையும்வரை வீதிகளில் பயணிக்கும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

சாரதிகள், கவனயீனமற்ற முறையிலும், அதிக வேகத்துடனும், மதுபோதையிலும் வாகனங்களை செலுத்துகின்றமை தொடர்பில் கண்காணிக்கப்படுகிறது.
குறிப்பாக மதுபோதையில் அல்லது போதைப்பொருளை பயன்படுத்தியவாறு, வாகனத்தை செலுத்திய நிலையில் கைதுசெய்யப்படும் சாரதிகளுக்கு, பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது.

அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதுடன், குறித்த வாகனமும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்படும் எனவும் அவர் கூறினார்.

வீட்டில் இருந்தப்படியே எளிய முறையில் செய்யக்கூடிய பிரெஞ்சு ப்ரைஸ்! எப்படி செய்வது?

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் பிரெஞ்சு ப்ரைஸ் ஒன்றாகும்.

பிரெஞ்சுச் சமையல்காரா் ஒருவரால் கண்டறியப்பட்டதால், இது”ப்ரெஞ்ச் ப்ரைஸ்” எனப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதனை ஹேட்டல்களிலும், சில கடைகளிலும் பிரத்தியேகமாக செய்யப்படுகின்றது.

இருப்பினும் இதனை வீட்டில் இருந்து கூட எளிய முறையில் இதனை தயார் செய்ய முடியும். அந்தவகையில் தற்போது இதனை எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
  • உருளைக்கிழங்கு – 2 (பெரியது)
  • உப்பு – சுவைக்கேற்ப
  • எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
  • முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும். அப்படி வெட்டும் போது உருளைக்கிழங்கு மிகவும் தடிமனாகவோ அல்லது மிகவும் மெல்லியதாகவோ இருக்காமல் பார்த்து வெட்டுங்கள்.
  • பின் வெட்டிய உருளைக்கிழங்கை நீரில் ஒருமுறை அலசி விட்டு, குளிர்ந்த நீரில் 10-15 நிமிடம் ஊற வையுங்கள்.
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
  • எண்ணெய் நன்கு சூடானதும், நெருப்பைக் குறைத்துவிட்டு, முதலில் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு நன்கு மொறுமொறுப்பாகும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளை டிஷ்யூ பேப்பரின் மேல் வைத்து, குளிர வைக்கவும். பின் அதன் மேல் உப்பு தூவி ஒருமுறை பிரட்டி விட்டால், சுவையான பிரெஞ்சு ப்ரைஸ் தயார். இதை தக்காளி சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்

அரச கூட்டணிக்குள் கருத்து மோதல் – ஒப்புக்கொண்டார் மஹிந்தானந்த

” அரச கூட்டணிக்குள் கருத்து மோதல் இருப்பது உண்மைதான். மாகாணசபைத் தேர்தலை முறைமை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைத்த திட்டத்துக்கு பங்காளிக்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனவே, 19 ஆம் திகதி பிரதமர் தலைமையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. அதன்பின்னர் சுமூக நிலை உருவாகும்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் நிலை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கைகள் இருக்கின்றன. எனவே, கொள்கை ரீதியிலான முரண்பாடொன்றை தற்போது ஏற்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக மாகாணசபைத் தேர்தலை மையப்படுத்தியே அந்த பிரச்சினை எழுந்துள்ளது.

70 இற்கும் 30 என்ற அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கான திட்டம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் ஒரு கட்சி மூவரை நிறுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த யோசனைக்கே பங்காளிக்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் பேச்சு நடத்தி இணக்கப்பாடொன்றுக்கு வரமுடியும் என நம்புகின்றோம். பிரதமர் தலைமையில் 19 ஆம் திகதி நடைபெறும் சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்படலாம்.

மாகாணசபைகளுக்கான தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். ஒன்றாக இணைந்தே மே தினம் அனுஷ்டிக்கப்படும். பங்காளிக்கட்சிகள் தனியாக நிகழ்வுகளை நடத்தமாட்டா. கருத்து மோதல் பேச்சு மூலம் தீர்க்கப்படும். கூட்டணியாக முன்னோக்கி பயணிப்போம்.” – என்றார்.

சினிமா

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

செய்தி

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

0
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன. மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...

யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

0
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...